Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Suttraadhae bhoomi thaayae nillu
En mannan engae endru sollu
Veesadhae thendral kaatrae nillu
Naan thedum jeevan engae sollu

Female : Kodi vinmeengalil
Endhan vinmeen engae
Ennai thaalaatumae
Andha raagam engae
Endhan sogaththai sollgindra solledhu..uu…

Female : Suttraadhae bhoomi thaayae nillu
En mannan engae endru sollu

Chorus : …………………………..

Female : Adhi kaalaiyil thuyil velaiyil
Kanavaaga theendi vittu nee ponaai
Thuyil neenginen unnai thedinen
Vizhi thaandi dhooram endru nee aanaai

Female : Ullukkul unnai kandu konden
Un kannil ennai kaana vendum
Vaanathil vennilavin veedhi
Sollaadho unnai kaanum thedhi

Female : Undhan thozhlil poovaai
Vizha vendum
Endhan sogam solli azha vendum
Andha naal kaana en nenjam thavikkum…
Mm…mmm…mmm…mm..

Female : Suttraadhae bhoomi thaayae nillu
En mannan engae endru sollu
Veesadhae thendral kaatrae nillu
Naan thedum jeevan engae sollu

Female : Aaah…aah…aaah..
Aaah…aaah..aaaha

Female : Oru naazhigai unnai paartha pin
Meendum paarvai pogum ini pogattum
Undhan thaen kural konjam ketta pin
Endhan jeevan oyum ini oyattum

Female : Endraenum unnai kaana koodum
Endru enni endhan jeevan vaazhum
Saagaadha kaadhal varam vendum
Oyaamal unnai thozha vendum

Female : Kaatrai thedum
Pullanguzhal polae
Yengi paadum ottrai kuyil aanen
Unnai kaanaamal en kangal thoongaadhu…

Female : Suttraadhae bhoomi thaayae nillu
En mannan engae endru sollu
Veesadhae thendral kaatrae nillu
Naan thedum jeevan engae sollu

 

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சுற்றாதே பூமி தாயே
நில்லு என் மன்னன் எங்கே
என்று சொல்லு வீசாதே
தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே
சொல்லு

பெண் : கோடி விண்மீன்களில்
எந்தன் விண்மீன் எங்கே என்னை
தாலாட்டுமே அந்த ராகம் எங்கே
எந்தன் சொர்கத்தை சொல்கின்ற
சொல் ஏது

பெண் : சுற்றாதே பூமி
தாயே நில்லு என் மன்னன்
எங்கே என்று சொல்லு

குழு : …………………………..

பெண் : அதி காலையில் துயில்
வேளையில் கனவாக தீண்டி
விட்டு நீ போனாய் துயில்
நீங்கினேன் உன்னை தேடினேன்
விழி தாண்டி தூரம் என்று நீ
ஆனாய்

பெண் : உள்ளுக்குள் உன்னை
கண்டு கொண்டேன் உன்
கண்ணில் என்னை காண
வேண்டும் வானத்தில்
வெண்ணிலாவின் வீதி
சொல்லாதோ உன்னை
காணும் தேதி

பெண் : உந்தன் தோளில்
பூவாய் விழ வேண்டும்
எந்தன் சோகம் சொல்லி
அழ வேண்டும் அந்த நாள்
காண என் நெஞ்சம் தவிக்கும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : சுற்றாதே பூமி தாயே
நில்லு என் மன்னன் எங்கே
என்று சொல்லு வீசாதே
தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே
சொல்லு

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆஹா

பெண் : ஒரு நாழிகை உன்னை
பார்த்த பின் மீண்டும் பார்வை
போகும் இனி போகட்டும் உந்தன்
தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்
எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்

பெண் : என்றேனும் உன்னை
காண கூடும் என்று எண்ணி
எந்தன் ஜீவன் வாழும் சாகாத
காதல் வரம் வேண்டும்
ஓயாமல் உன்னை தொழ
வேண்டும்

பெண் : காற்றை தேடும்
புல்லாங்குழல் போலே
ஏங்கி பாடும் ஒற்றை
குயில் ஆனேன் உன்னை
காணாமல் என் கண்கள்
தூங்காது

பெண் : சுற்றாதே பூமி
தாயே நில்லு என் மன்னன்
எங்கே என்று சொல்லு வீசாதே
தென்றல் காற்றே நில்லு நான்
தேடும் ஜீவன் எங்கே சொல்லு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here