Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male : Ezhuthu namakku aayutham
Em kai ezhuthu enakku adaiyalam
Adayalam izhappathu avamanam
Athai kaakka ninaikkum
Tamizh thanmaanam..heyy eeyy

Male : Anniya mozhiyil kai ezhuthu
Athu adimai moga poi ezhuthu
Annai tamizhin kai ezhuthu
Athu arivorin ariyaa mei ezhuthu
Heyy eeyy

Male : Unarvil kazhantha
Uyir ezhuthu
Athu unmai arinthorkku
Mei ezhuthu
Aranaai nirkkum
Aayutha ezhuthu
Avai anaithum nam
Tamizh nal muthu

Male : Hmm mmm mmmm..(4)

Male : Enthan thaai ootiya mozhiyai
Eduthu erithal thaan thagummo
Sinthai niraintha intha semmozhiyai
Kindal seithal thaan athu nyaayama
Annai sollai aravae marappathum
Anniya mozhiyai abathil tharippathum

Male : Athu veenar velai
Koonar paarvai
Vetru maayai
Thotru nooyai

Male : Ini tamizhai yetriduvom
Thalai ezhuthai matriduvom
Kai oppam Ittiduvom
Athil kanni tamizhil kottiduvom

Male : Ohoo…ooo…ooo…ooo…(4)

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : எழுத்து நமக்கு ஆயுதம்
எம் கை எழுத்து எனக்கு அடையாளம்
அடையாளம் இழப்பது அவமானம்
அதை காக்க நினைக்கும்
தமிழ் தன்மானம்…ஹேய் ய்ய்

ஆண் : அந்நிய மொழியில் கை எழுத்து
அது அடிமை மோக பொய் எழுத்து
அன்னை தமிழின் கை எழுத்து
அது அறிவோரின் அறியா மெய் எழுத்து
ஹேய் ய்ய்

ஆண் : உணர்வில் கலந்த
உயிர் எழுத்து
அது உண்மை அறிந்தோர்க்கு
மெய் எழுத்து
அறனாய் நிற்கும்
ஆயுத எழுத்து
அவை அனைத்தும் நம்
தமிழ் நல் முத்து

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்….(4)

ஆண் : எந்தன் தாய் ஊட்டிய மொழியை
எடுத்து எறிதல் தான் தகும்மோ
சிந்தை நிறைந்த இந்த செம்மொழியை
கிண்டல் செய்தால் தான் அது நியாயமா
அன்னை சொல்லே அறவே மறப்பதும்
அந்நிய மொழியை ஆபத்தில் தரிப்பதும்

ஆண் : அது வீனர் வேலை
கூனர் பார்வை
வெற்று மாயை
தொற்று நோயை

ஆண் : இனி தமிழை ஏற்றிடுவோம்
தலை எழுத்தை மாற்றிடுவோம்
கை ஒப்பம் இட்டிடுவோம்
அதில் கன்னி தமிழில் கொட்டிடுவோம்

ஆண் : ஓஹோ..ஓஒ…ஓஒ…ஓஒ…(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here