Singer : P. Jayachandran

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Male : ………………..

Male : Tamilirunthu ulagam muzhuthum
Inimai piranthathu
Adhai thazhuva thazhuva
Pudhiya pudhiya kavithai poranthathu

Male : Enthan vizhiyum thiranthathu
Oru vazhiyum therinthathu
Naan pazhaga pazhaga

Male : Tamilirunthu ulagam muzhuthum
Inimai piranthathu
Adhai thazhuva thazhuva
Pudhiya pudhiya kavithai poranthathu

Male : Vellai thamarai aval pillai kalaimagal
Antha vilakkinadiyil enathu manathu vedham padiththathu
Paniyil aadinen nalla kaniyai naadinaen aval
Kanintha sirippil vizhunthu vizhunthu kavithai padinen

Male : Iniyathu thaen sinthum poonthamizh endru
Aruginil naan sendru kaaviyam kondu
Madiyinil vizhunthathu enna mogamo

Male : Tamilirunthu ulagam muzhuthum
Inimai piranthathu
Adhai thazhuva thazhuva
Pudhiya pudhiya kavithai piranthathu

Male : Antha poonjittu aval endrum pathinettu
Naan rasikka rasikka edhuththu kodukka nalla poomottu
Kamban paattilae aval kaatchi therinthathu
Aval salangai kulunga nadantha nadaiyil
Sabalam piranthathu

Male : Avalidam naanooru vannangal kandaen
Aasaiyil ennangal aayiram kondaen
Avalukkum tamizhukkum oru jaadaiyo

Male : Tamilirunthu ulagam muzhuthum
Inimai piranthathu
Adhai thazhuva thazhuva
Pudhiya pudhiya kavithai piranthathu ho

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ……………………

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்
இனிமை பிறந்தது
அதை தழுவ தழுவ
புதிய புதிய கவிதை பிறந்தது

ஆண் : எந்தன் விழியும் திறந்தது
ஒரு வழியும் தெரிந்தது
நான் பழக பழக புதுமை மலர்ந்தது ஹோ….

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்
இனிமை பிறந்தது
அதை தழுவ தழுவ
புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ

ஆண் : வெள்ளை தாமரை அவள் பிள்ளை கலைமகள்
அந்த விளக்கினடியில் எனது மனது வேதம் படித்தது
பனியில் ஆடினேன் நல்ல கனியை நாடினேன் அவள்
கனிந்த சிரிப்பில் விழுந்து விழுந்து கவிதை பாடினேன்

ஆண் : இனியது தேன் சிந்தும் பூந்தமிழ் என்று
அருகினில் நான் சென்று காவியம் கொண்டு
மடியினில் விழுந்தது என்ன மோகமோ

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்
இனிமை பிறந்தது
அதை தழுவ தழுவ
புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ

ஆண் : அந்த பூஞ்சிட்டு அவள் என்றும் பதினெட்டு
நான் ரசிக்க ரசிக்க எடுத்து கொடுக்க நல்ல பூமொட்டு
கம்பன் பாட்டிலே அவள் காட்சி தெரிந்தது
அவள் சலங்கை குலுங்க நடந்த நடையில்
சபலம் பிறந்தது

ஆண் : அவளிடம் நானூறு வண்ணங்கள் கண்டேன்
ஆசையில் எண்ணங்கள் ஆயிரம் கொண்டேன்
அவளுக்கும் தமிழுக்கும் ஒரு ஜாடையோ

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்
இனிமை பிறந்தது
அதை தழுவ தழுவ
புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here