Singer : Arunmozhi

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Thaai illaa pillai oru thaalaattu paada
Vaai illaa pillai sogaththai koora
Idhu kaaththodu aaththodu pogum
Megam pol odam polae
Idhu karai oram orr naalil serum
Kaalam nal neram vanthaalae

Male : Thaai illaa pillai oru thaalaattu paada
Vaai illaa pillai sogaththai koora

Male : Thaai oru paavaththin chinnam endru
Pillai thalli vaiththaan
Oor oru poi katti vittathendru
Pinbuthaan arinthaan

Male : Pattarivaai vaazhkkai paadaththai
Kattru kondaan
Pothu endru oorin uravai
Vettikkondaan
Thanneerilae ennaiyai pol
Ottaamal vaazhkindraan

Male : Thaai illaa pillai oru thaalaattu paada
Vaai illaa pillai sogaththai koora

Male : Nee eeram kaanaatha paadhai endru
Yaarum pesiduvaar
Neer intha paaraikkul oorum endru
Ingu yaar arivaar

Male : Mattravar pol…..
Ingu ivanum maanidanthaan
Ullaththilae nooru ninaippu ullavanthaan
Ennangalai ennavendru
Sollaamal moodi vaiththaan

Male : Thaai illaa pillai oru thaalaattu paada
Vaai illaa pillai sogaththai koora
Idhu kaaththodu aaththodu pogum
Megam pol odam polae
Idhu karai oram orr naalil serum
Kaalam nal neram vanthaalae

Male : Thaai illaa pillai oru thaalaattu paada
Vaai illaa pillai sogaththai koora

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற
இது காத்தோடு ஆத்தோடு போகும்
மேகம் போல் ஓடம் போலே
இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்
காலம் நல் நேரம் வந்தாலே…..

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

ஆண் : தாய் ஒரு பாவத்தின் சின்னம் என்று
பிள்ளை தள்ளி வைத்தான்
ஊர் ஒரு பொய் கட்டி விட்டதென்று
பின்பு தான் அறிந்தான்

ஆண் : பட்டறிவாய் வாழ்க்கைப் பாடத்தை
கற்றுக் கொண்டான்
போதும் என்று ஊரின் உறவை
வெட்டிக் கொண்டான்
தண்ணீரிலே எண்ணையைப் போல்
ஒட்டாமல் வாழ்கின்றான்….

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

ஆண் : நீர் ஈரம் காணாத பாதை என்று
யாரும் பேசிடுவார்
நீர் இந்தப் பாறைக்குள் ஊறும் என்று
இங்கு யார் அறிவார்

ஆண் : மற்றவர் போல்…….
இங்கு இவனும் மானிடன்தான்
உள்ளத்திலே நூறு நினைப்பு உள்ளவன்தான்
எண்ணங்களை என்னவென்று
சொல்லாமல் மூடி வைத்தான்……

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற
இது காத்தோடு ஆத்தோடு போகும்
மேகம் போல் ஓடம் போலே
இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்
காலம் நல் நேரம் வந்தாலே…..

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட
வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here