Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Thaai kaatha pillai ennai
Vel kakkavillai endru
Thaai kaatha pillai ennai
Vel kakkavillai endru
Naal paarthu vittadhaiyaa kandhaiyaa
Ennai nee kaakkavillaiyendraal
Yaar kakka koodumaiyaa
Paal vaarkkum naalidhuvoo sollaiyoo

Female : Thaai kaatha pillai ennai
Vel kakkavillai endru
Naal paarthu vittadhaiyaa kandhaiyaa
Ennai nee kaakkavillaiyendraal
Yaar kakka koodumaiyaa
Paal vaarkkum naalidhuvoo sollaiyoo
Enakku paal vaarkkum naalidhuvoo sollaiyoo

Female : Ettaandum ettavillai ettadha vaan ulagai
Ettumpadikku vaithaai yen aiyaa
Ettaandum ettavillai ettadha vaan ulagai
Ettumpadikku vaithaai yen aiyaa
Annai sottum kanneerai andha kuttraala aruviyendroo
Kotti kulikka veithaai velaiyaa

Female : Thaai kaatha pillai ennai
Vel kakkavillai endru
Naal paarthu vittadhaiyaa kandhaiyaa
Ennai nee kaakkavillaiyendraal
Yaar kakka koodumaiyaa
Paal vaarkkum naalidhuvoo sollaiyoo
Enakku paal vaarkkum naalidhuvoo sollaiyoo

Female : Thaaiyum adimai endhan thandhai adimai
Nitham naanum adimai vadivelaiyaaa
Thaaiyum adimai endhan thandhai adimai
Nitham naanum adimai vadivelaiyaaa
Nee saeiyum koduthu ema noyum koduthu
Oru paayum virithu vaithaai yen aiyaa

Female : Kandamani oli kaathu nirkaadho karunai en maeni
Kanneer nadhiyinai adaithu vidaayoo thandaayudhapaani
Nambiya perai kaapaai endraan androor tamil gyaani
Aiyoo veladhu poiyaa enakkarul purivaaya nee
Idhu koyil maniyo illai kaalan maniyoo
Solvaai muruga varuvaai muruga
Muruga muruga muruga muruga

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தாய் காத்த பிள்ளை என்னை
வேல் காக்கவில்லை என்று
தாய் காத்த பிள்ளை என்னை
வேல் காக்கவில்லை என்று
நாள் பார்த்து விட்டதைய்யா கந்தைய்யா
என்னை நீ காக்கவில்லையென்றால்
யார் காக்க கூடுமய்யா
பால் வார்க்கும் நாளிதுவோ சொல்லய்யா

பெண் : தாய் காத்த பிள்ளை என்னை
வேல் காக்கவில்லை என்று
நாள் பார்த்து விட்டதைய்யா கந்தைய்யா
என்னை நீ காக்கவில்லையென்றால்
யார் காக்க கூடுமய்யா
பால் வார்க்கும் நாளிதுவோ சொல்லய்யா

பெண் : எட்டாண்டும் எட்டவில்லை எட்டாத வானுலகை
எட்டும்படிக்கு வைத்தாய் ஏனய்யா
எட்டாண்டும் எட்டவில்லை எட்டாத வானுலகை
எட்டும்படிக்கு வைத்தாய் ஏனய்யா
அன்னை சொட்டும் கண்ணீரை அந்த குற்றால அருவியென்று
கொட்டி குளிக்க வைத்தாய் வேலய்யா..

பெண் : தாய் காத்த பிள்ளை என்னை
வேல் காக்கவில்லை என்று
நாள் பார்த்து விட்டதைய்யா கந்தைய்யா
என்னை நீ காக்கவில்லையென்றால்
யார் காக்க கூடுமய்யா
பால் வார்க்கும் நாளிதுவோ சொல்லய்யா

பெண் : தாயும் அடிமை எந்தன் தந்தை அடிமை
நித்தம் நானும் அடிமை வடிவேலைய்யா…..ஆ….ஆ……
தாயும் அடிமை எந்தன் தந்தை அடிமை
நித்தம் நானும் அடிமை வடிவேலைய்யா…..
நீ சேயும் கொடுத்து எம நோயும் கொடுத்து
ஒரு பாயும் விரித்து வைத்தாய் ஏனய்யா……

பெண் : கண்டாமணி ஒலி காத்து நிற்காதோ கருணை என் மேனி
கண்ணீர் நதியினை அடைத்து விடாயோ தண்டாயுதபாணி
நம்பிய பேரை காப்பாய் என்றான் அன்றோர் ஞானி
அய்யா வேலது பொய்யா எனக்கருள் புரிவாயா நீ
இது கோயில் மணியோ இல்லை காலன் மணியோ
சொல்வாய் முருகா வருவாய் முருகா
முருகா……..முருகா…….முருகா……….முருகா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here