Singer : P. Susheela and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Thaai paadum paattuthaanae thaalaattu paattu
Thangamae palli kollu en paattai kettu
Thaai paadum paattuthaanae thaalaattu paattu
Thangamae palli kollu en paattai kettu

Female : Mheem mheem…..en paattai kettu…

Female : Aththai perum penthaanae unnodu koottu
Ammaadi palli kollu en paattai kettu
Female : Mheem mheem…..en paattai kettu…

Female : Aththai perum penthaanae unnodu koottu
Ammaadi palli kollu en paattai kettu

Female : Palum koduththu seevi mudiththu paarkkum
Thaaithaanae mudhal sontham maganae
Palum koduththu seevi mudiththu paarkkum
Thaaithaanae mudhal sontham maganae

Female : Seerum koduththu pennum koduththa
Naan sondhamillaiyaa en marumagane
Seerum koduththu pennum koduththa
Naan sondhamillaiyaa en marumagane

Female : Thirumagal inthapakkam meenatchi angae
Thirumaal koorattum mudhal paasam engae

Female : Thirumaal illaamal sridevi engae
Saernthae piranthaval meenatchi ingae
Female : Mheemm
Female : Mmmm

Female : Thaai paadum paattuthaanae thaalaattu paattu
Thangamae palli kollu en paattai kettu

Female : Vaigai manakka thendral manakkum
Madurai tamil sangam unakkaaga thirakkum

Female : Devi mugathai maarbil anintha
Thirumalai karpooram unakkaga jolikkum

Male : Azhagiya sokkalingam sila naalil varuvaan
Avan vantha pinnaalae pennondru tharuvaan

Male : Avanoru pennodu unaithedi varuvaan
Angaeyum naanthaanae munnodi varauvaen
Aayiram per munnae aarathi eduppaen

Female : Aaraaro aariraaro aaraariraaro

Both : Aaraaro aariraaro aaraariraaro
Aaraariraaro aaraariraaro

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு
தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு
தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு
தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு

பெண் : ம்ஹீம் ம்ஹீம்…..என் பாட்டை கேட்டு

பெண் : அத்தை பெறும் பெண்தானே உன்னோடு கூட்டு
அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு
பெண் : ம்ஹீம் ம்ஹீ…..என் பாட்டை கேட்டு

பெண் : அத்தை பெறும் பெண்தானே உன்னோடு கூட்டு
அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு

பெண் : பாலும் கொடுத்து சீவி முடித்து பார்க்கும்
தாய்தானே முதல் சொந்தம் மகனே
பாலும் கொடுத்து சீவி முடித்து பார்க்கும்
தாய்தானே முதல் சொந்தம் மகனே

பெண் : சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்த
நான் சொந்தமில்லையா என் மருமகனே
சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்த
நான் சொந்தமில்லையா என் மருமகனே

பெண் : திருமகள் இந்தப்பக்கம் மீனாட்சி அங்கே
திருமால் கூறட்டும் முதல் பாசம் எங்கே

பெண் : திருமால் இல்லாமல் ஸ்ரீதேவி எங்கே
சேர்ந்தே பிறந்தவள் மீனாட்சி இங்கே
பெண் : ம்ஹீம்ம்
பெண் : ம்ம்ம்ம்

பெண் : தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு
தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு

பெண் : வைகை மணக்க தென்றல் மணக்கும்
மதுரை தமிழ்ச்சங்கம் உனக்காக திறக்கும்

பெண் : தேவி முகத்தை மார்பில் அணிந்த
திருமலை கற்பூரம் உனக்காக ஜொலிக்கும்

ஆண் : அழகிய சொக்கலிங்கம் சில நாளில் வருவான்
அவன் வந்த பின்னாலே பெண்ணொன்று தருவான்

ஆண் : அவனொரு பெண்ணோடு உனைத்தேடி வருவான்
அங்கேயும் நான்தானே முன்னோடி வருவேன்
ஆயிரம் பேர் முன்னே ஆரத்தி எடுப்பேன்

பெண் : ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ

இருவர் : ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here