Singer : Vijay Yesudas

Music by : G. V. Prakash Kumar

Male : Thaai thindra mannae
Ithu pillaiyin katharal
Oru per arasan pulambal

Male : Thaai thindra mannae
Thaai thindra mannae
Pillaiyin katharal
Pillaiyin katharal
Oru per arasan pulambal
Per arasan pulambal

Male : Nel aadiya nilam engae
Sol aadiya avai engae
Vil aadiya kalam engae
Kal aadiya silai engae
Thaai thindra mannae
Thaai thindra mannae ..ae….

Chorus : Mmm…mmm…mmm…
Mmm…mmm….

Female : Thaa thin ka
Thikka thakka
Thaa
Thira nena thaa
Jika thakka thaa

Male : Kayal vilaiyaadum
Vayal veli thaedi
Kaainthu kazhinthana
Kangal

Male : Kaaviri malarin
Kadi manam thaedi
Karugi mudinthathu
Naa..aasi

Male : Silai vazhi maevum
Uli oli thaedi
Thirugi vizhunthana
Sevigal

Male : Oon pothi sottrin
Thaen suvai karuthi
Otti ularnthathu
Naavum mm…mm..

Male : Puli kodi poriththa
Chozha maanthargal
Eli kari korippathuvo oo oo
Kaattrai kudikkum
Thaavaram aagi
Kaalam kazhippathuvo..oo..oo..

Male : Mandai odugal
Mandiya naattai
Mannan aaluvatho oo
Mannan aaluvatho
Hoo oo oo oo oo oo

Male : Thaai thindra mannae
Thaai thindra mannae ..ae…ae…

Chorus : ……………………..

Male : Norungum udalgal
Pithungum uyirgal
Azhugum naadu
Azhugindra arasan

Male : Pazham thinnum kiliyo
Pinam thinnum kazhugo
Thootho mun vinai theetho
Kalangalum athira
Kalirugal pilira
Chozhan azhaiththu povaayo

Male : Thangamae ennai
Thaai mannil serththaal
Thurvigal polae
Purandiruppom

Male : Aayiram aandugal
Serththa kanneerai
Aruvigal polae
Azhuthiruppom

Male : Athu varai
Athu varai
Oh oh oh… hooo oooo

Male : Thamizhar kaanum thuyaram kandu
Thalaiyai suttrum kolae azhaathae
Endro oru naal vidiyum endrae
Iravai sumakkum naalae azhaathae

Male : Noottraandugalin thuruvai thaangi
Uraiyil thoongum vaalae azhaathae
Enthan kannin kanneer kazhuva
Ennodazhum yaazhae azhaathae ..ae…ae…ae…

Male : Nel aadiya nilam engae
Sol aadiya avai engae
Vil aadiya kalam engae
Kal aadiya silai enga
Thaai thindra mannae
Ithu pillaiyin katharal
Oru per arasan pulambal

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேர் அரசன் புலம்பல்

ஆண் : தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
பிள்ளையின் கதறல்
ஒரு பேர் அரசன் புலம்பல்
ஒரு பேர் அரசன் புலம்பல்

ஆண் : நெல் ஆடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே..ஏ…

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…

பெண் : தா தின் கா
திக்கா தக்கா
தா
திற நென தா
ஜிக தக்க தா

ஆண் : கயல் விளையாடும்
வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன
கண்கள்

ஆண் : காவிரி மலரின்
கடி மனம் தேடி
கருகி முடிந்தது
நா…ஆசி

ஆண் : சிலை வடி மேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன
செவிகள்

ஆண் : ஊன் பொதி சோற்றின்
தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது
நாவும் ம்ம்…ம்ம்..

ஆண் : புலிக் கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக் கறி கொறிப்பதுவோ..ஓ…ஓ…
காற்றை குடிக்கும்
தாவரம் ஆகி
காலம் கழிப்பதுவோ…ஓ…ஓ

ஆண் : மண்டை ஓடுகள்
மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ ஓ
மன்னன் ஆளுவதோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே…ஏ…ஏ..

குழு : ……………………

ஆண் : நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்

ஆண் : பழம் தின்னும் கிளியோ
பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்கலும் அதிர
களிருகள் பிளிர
சோழம் அழைத்து போவாயோ

ஆண் : தங்கமே என்னை
தாய் மண்ணில் சேர்த்தால்
துறவிகள் போலே
புரண்டிருப்போம்

ஆண் : ஆயிரம் ஆண்டுகள்
சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே
அழுதிருப்போம்

ஆண் : அது வரை
அது வரை
ஓ ஓ ஓ… ஹோ ஓஒ

ஆண் : தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே அழாதே

ஆண் : நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே அழாதே..ஏ…ஏ…
ஏ…

ஆண் : நெல் ஆடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேர் அரசன் புலம்பல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here