Singers : P. Susheela and K. Swarna
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Thaai un thaai kulam thazhaikka vanthaai
Uyir pizhaikka vanthaai
Thaai un thaai kulam thazhaikka vanthaai
Uyir pizhaikka vanthaai
Female : Muththaai mullai koththaai
Muththaai mullai koththaai
Engal soththaai nee piranthaai
Female : Thaai un thaai kulam thazhaikka vanthaai
Uyir pizhaikka vanthaai
Female : Vaaivitu sollaatha vedhanaiyil
Unthan thaai pattu vantha sodhanaiyil
Vaaivitu sollaatha vedhanaiyil
Unthan thaai pattu vantha sodhanaiyil
Female : Kaaivitta maramaai malarvitta kodiyaai
Kaaivitta maramaai malarvitta kodiyaai
Both : Nee vanthu thavazhnthaai en manaiyil
Female : Thaai un thaai kulam thazhaikka vanthaai
Uyir pizhaikka vanthaai
Female : Appa mudhugil aanai vilaiyaattu
Anbu maganae nee aadi vanthu kaattu
Appa mudhugil aanai vilaiyaattu
Anbu maganae nee aadi vanthu kaattu
Female : Antha naal indru entha naal endru
Annai manam ketkum unnidathil indru
Female : Thaai un thaai kulam thazhaikka vanthaai
Uyir pizhaikka vanthaai
Female : Paal manam maaraatha mazhalaiyilae
Annai maranthiruppaal than kavalai thanai
Naaloru vithamaai naan kanda kanavaai
Nee vanthu thavazhnthaai en manaiyil
Innaal inbam pinnaal varum nannaal yaararivaar
Female : Thaai un thaai kulam thazhaikka vanthaai
Uyir pizhaikka vanthaai
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஸ்வர்ணா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்
உயிர் பிழைக்க வந்தாய்
தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்
உயிர் பிழைக்க வந்தாய்
பெண் : முத்தாய் முல்லை கொத்தாய்
முத்தாய் முல்லை கொத்தாய்
எங்கள் சொத்தாய் நீ பிறந்தாய்
பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்
உயிர் பிழைக்க வந்தாய்
பெண் : வாய் விட்டு சொல்லாத வேதனையில்
உந்தன் தாய் பட்டு வந்த சோதனையில்
வாய் விட்டு சொல்லாத வேதனையில்
உந்தன் தாய் பட்டு வந்த சோதனையில்
பெண் : காய் விட்ட மரமாய் மலர்விட்ட கொடியாய்
காய் விட்ட மரமாய் மலர்விட்ட கொடியாய்
இருவர் : நீ வந்து தவழ்ந்தாய் என் மனையில்
பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்
உயிர் பிழைக்க வந்தாய்
பெண் : அப்பா முதுகில் ஆனை விளையாட்டு
அன்பு மகனே நீ ஆடி வந்து காட்டு
அப்பா முதுகில் ஆனை விளையாட்டு
அன்பு மகனே நீ ஆடி வந்து காட்டு
பெண் : அந்த நாள் இன்று எந்த நாள் என்று
அன்னை மனம் கேட்கும் உன்னிடத்தில் இன்று
பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்
உயிர் பிழைக்க வந்தாய்
பெண் : பால் மனம் மாறாத மழலையிலே
அன்னை மறந்திருப்பாள் தன் கவலை தனை
நாளொரு விதமாய் நான் கண்ட கனவாய்
நீ வந்து தவழ்ந்தாய் என் மனையில்
இந்நாள் இன்பம் பின்னால் வரும் நன்னாள் யாரறிவார்
பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்
உயிர் பிழைக்க வந்தாய்