Singer : Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamai Pithan

Male : Thaayaai irukkum anivarukkum thaayae
Gyaana sambantham thamizh vaaithathumbha
Paal kodutha kanamae
Karunai thadangadalae karunai thadangadalae

Male : Seyaai engal gurubaran than
Sezhikkum pillai thamizh kettu
Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae
Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae

Male : Andha paarkadalae paayaai urangum
Parandhaman paasa pirappae
Paadhaiyil or panneer nadhiyae
Bairaviyae bairaviyae

Male : Paadum enadhu vizhi munnae
theeyaai elundhu
Pazham vinaiyaam theeyai anaikkum
Maari enum sivanin vizhiyae
Karumaari enum sivanin vizhiyae
Vizhikamaindha imaiyae umaiyae
Emadhammaiyae

பாடகர் : டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

ஆண் : தாயாய் இருக்கும் அனைவர்க்கும் தாயே
ஞான சம்பந்தன் தமிழ் வாய்த்ததுந்தன்
பால் குடித்த கணமே
கருணை தடங் கடலே கருணை தடங் கடலே

ஆண் : சேயாய் எங்கள் குருபரன் தன்
செழிக்கும் பிள்ளைத் தமிழ் கேட்டு
சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே
சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே

ஆண் : அந்த பாற்கடலே பாயாய் உறங்கும்
பரந்தாமன் பாசப் பிறப்பே
பாதையில் ஓர் பன்னீர் நதியே
பைரவியே பைரவியே

ஆண் : பாடும் எனது விழி முன்னே தீயாய் எழுந்து
பழம் வினையாம் தீயை அணைக்கும்
மாரி எனும் சிவனின் விழியே
கருமாரி எனும் சிவனின் விழியே
விழிக்கமைந்த இமையே உமையே..
எனதம்மையே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here