Singer : Hari Charan

Music by : Ilayaraja

Male : Thaayae vandhaayae nee anbudan ennidathil
Thaayae vandhaayae nee anbudan ennidathil
Oru nodi unai naan marandhadhum undo
Nee endhan nenjai neengiyadhundo
Sinnanchiru mazhalaiyaaga
Ippodhendhan kaiyil vandhaai

Male : Thaayae vandhaayae nee anbudan ennidathil
Thaayae vandhaayae nee anbudan ennidathil

Male : Chinna chinna indha chella kilikkoru
Kuttiyammaa endru paeru vaippen

Male : Vanna vanna chinna pinju kazhuttukku
Thanga changiliyai soottiduven

Male : Vazhi theriyaamal vaadiya enakku
Vizhigalai thirandha vidi velli neeyae
Thathi varum kiliyae muthu mani chudarae
Vittu vilagaadha nenjin uyir moochae
Ennai oru manidhanaakka
Yaeno endhan kaiyil vandhaai

Male : Thaayae vandhaayae nee anbudan ennidathil
Thaayae vandhaayae nee anbudan ennidathil

Male : Sitham kalangiya pithan ennai thaedi
Kitta vandhadhenna muthu kodi

Male : Sutri sutri vandha paadhaiyai maattrida
Pattri pidithadhu paasa kodi

Male : Thadam theriyaamal thani vazhi ponen
Thari kettu naanum thanai marandhirundhen
Sudaroliyaaga en manam nirandhaai
Nilavoliyaaga nimmadhi thandhaai
Ini endha ulagam ellaam
Neeyae neeyae chella kutti

Male : Thaayae vandhaayae nee anbudan ennidathil
Thaayae vandhaayae nee anbudan ennidathil
Oru nodi unai naan marandhadhum undo
Nee endhan nenjai neengiyadhundo
Sinnanchiru mazhalaiyaaga
Ippodhendhan kaiyil vandhaai

Male : Thaayae vandhaayae nee anbudan ennidathil
Thaayae vandhaayae nee anbudan ennidathil

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ
நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ
சின்னஞ்சிறு மழலையாக
இப்போதெந்தன் கையில் வந்தாய்

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

ஆண் : சின்னச் சின்ன இந்த செல்லக் கிளிக்கொரு
குட்டியம்மா என்று பேரு வைப்பேன்

ஆண் : வண்ண வண்ணச் சின்ன பிஞ்சு கழுத்துக்கு
தங்கச் சங்கிலியைச் சூட்டிடுவேன்

ஆண் : வழி தெரியாமல் வாடிய எனக்கு
விழிகளை திறந்த விடி வெள்ளி நீயே
தத்தி வரும் கிளியே முத்து மணிச் சுடரே
விட்டு விலகாத நெஞ்சின் உயிர் மூச்சே
என்னை ஒரு மனிதனாக்க
ஏனோ எந்தன் கையில் வந்தாய்

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

ஆண் : சித்தம் கலங்கிய பித்தன் என்னைத் தேடி
கிட்ட வந்ததென்ன முத்துக் கொடி

ஆண் : சுற்றிச் சுற்றி வந்த பாதையை மாற்றிட
பற்றிப் பிடித்தது பாசக் கொடி

ஆண் : தடம் தெரியாமல் தனி வழி போனேன்
தறி கெட்டு நானும் தனை மறந்திருந்தேன்
சுடரொளியாக என் மனம் நிறைந்தாய்
நிலவொளியாக நிம்மதி தந்தாய்
இனி எந்தன் உலகம் எல்லாம்
நீயே நீயே செல்லக் குட்டி

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ
நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ
சின்னஞ்சிறு மழலையாக
இப்போதெந்தன் கையில் வந்தாய்

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here