Singer : K. J. Yesudas

Music by : A. T. Ummer

Lyrics by : Kannadasan

Male : Anbenum valiyilae
Agappattathe maan kandru
Anaiththavarkku thunbam endraal
Kalanguthamma thaaninindru

Male : Thaayillaatha maan kandru
Thanimai konda maan kandru
Thazhuvugindra kaikalilae
Thangivitta maan kandru

Male : Thaayillaatha maan kandru
Thanimai konda maan kandru
Thazhuvugindra kaikalilae
Thangivitta maan kandru
Thangivitta maan kandru

Male : Kadanthu poga ninaikkuthu
Kadamai yaedho thadukkuthu
Paranthu poga ninaikkuthu
Paasam vanthu maraikkuthu

Male : Munbu sila naatgalae
Murandu ndra kanadrammaa
Moodan endrum muradan endrum
Pereduththa kandrammaa….

Male : Thaayillaatha maan kandru
Thanimai konda maan kandru
Thazhuvugindra kaikalilae
Thangivitta maan kandru
Thangivitta maan kandru

Male : Anbu valai pattathum
Adimaiyaana kandrammaa
Aandavanae anbukkuththaan
Adimai endru sollammaa

Male : Anbu valai pattathum
Adimaiyaana kandrammaa
Aandavanae anbukkuththaan
Adimai endru sollammaa

Male : Kudi puguntha veettaiyae
Koyilaaga ninaikkindraai
Koyilukkul kalasam endraal
Thuvalukindraan thavikkidraan

Male : Thaayillaatha maan kandru
Thanimai konda maan kandru
Thazhuvugindra kaikalilae
Thangivitta maan kandru
Thangivitta maan kandru

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஏ. டி. உமர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அன்பெனும் வலையிலே
அகப்பட்டதே மான் கன்று
அணைத்தவர்க்கு துன்பம் என்றால்
கலங்குதம்மா தானின்று……

ஆண் : தாயில்லாத மான் கன்று
தனிமை கொண்ட மான் கன்று
தழுவுகின்ற கைகளிலே
தங்கிவிட்ட மான் கன்று

ஆண் : தாயில்லாத மான் கன்று
தனிமை கொண்ட மான் கன்று
தழுவுகின்ற கைகளிலே
தங்கிவிட்ட மான் கன்று
தங்கிவிட்ட மான் கன்று

ஆண் : கடந்து போக நினைக்குது
கடமை ஏதோ தடுக்குது
பறந்து போக நினைக்குது
பாசம் வந்து மறைக்குது

ஆண் : முன்பு சில நாட்களே
முரண்டு நின்ற கன்றம்மா
மூடன் என்றும் முரடன் என்றும்
பேரெடுத்த கன்றம்மா……..

ஆண் : தாயில்லாத மான் கன்று
தனிமை கொண்ட மான் கன்று
தழுவுகின்ற கைகளிலே
தங்கிவிட்ட மான் கன்று
தங்கிவிட்ட மான் கன்று

ஆண் : அன்பு வலை பட்டதும்
அடிமையான கன்றம்மா
ஆண்டவனே அன்புக்குத்தான்
அடிமை என்று சொல்லம்மா

ஆண் : அன்பு வலை பட்டதும்
அடிமையான கன்றம்மா
ஆண்டவனே அன்புக்குத்தான்
அடிமை என்று சொல்லம்மா

ஆண் : குடி புகுந்த வீட்டையே
கோயிலாக நினைக்கின்றாய்
கோயிலுக்குள் கலசம் என்றால்
துவளுகின்றான் தவிக்கின்றான்

ஆண் : தாயில்லாத மான் கன்று
தனிமை கொண்ட மான் கன்று
தழுவுகின்ற கைகளிலே
தங்கிவிட்ட மான் கன்று
தங்கிவிட்ட மான் கன்று


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here