Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Thaayin mugamingu nizalaaduthu
Thanthai manamingu uravaaduthu
Thaayin mugamingu nizalaaduthu
Thanthai manamingu uravaaduthu

Female : Koyil vilakkondru kooda pirappendru
Paadum kural ketkuthu

Female : Thaayin mugamingu nizalaaduthu
Thanthai manamingu uravaaduthu

Female : Kannil imaiyaaga thangai nalamaaga
Kaanum thunaiyallavo
Kannil imaiyaaga thangai nalamaaga
Kaanum thunaiyallavo

Female : Ponnai koduthenum poovai koduthaenum
Pottrum uravallavo
Thaanaada maranthaalum sathaiyaadum enpaargal
Thaalaatha paasaththil anna endrazhaippaargal

Female : Aasai manam undu poojai malar undu
Dheivam neeyallavo anna
Dheivam neeyallavo….oo…oo..oo…

Female : Thaayin mugamingu nizalaaduthu
Thanthai manamingu uravaaduthu

Female : Mannil idam konda
Thennai ilangandru
Mannai piriyaathannaa…aa…aa..aa….

Female : Mangai mugam konda
Manjal niram endrum
Pennai piriyaathannaa….

Female : Engae irunthaalum unnai maravaatha
Ullam idhuvallavo
Anna ullam idhuvallavo…oo….

Female : Thaayin mugamingu nizalaaduthu
Thanthai manamingu uravaaduthu
Thaayin mugamingu nizalaaduthu
Thanthai manamingu uravaaduthu
Koyil vilakkondru kooda pirappendru
Paadum kural ketkuthu

Female : Thaayin mugamingu nizalaaduthu
Thanthai manamingu uravaaduthu

பாடகி : பி. சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

பெண் : கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

பெண் : கண்ணில் இமையாக தங்கை நலமாக
காணும் துணையல்லவோ
கண்ணில் இமையாக தங்கை நலமாக
காணும் துணையல்லவோ

பெண் : பொன்னைக் கொடுத்தேனும் பூவை கொடுத்தேனும்
போற்றும் உறவல்லவோ
தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்
தாளாத பாசத்தில் அண்ணா என்றழைப்பார்கள்

பெண் : ஆசை மனம் உண்டு பூஜை மலர் உண்டு
தெய்வம் நீயல்லவோ அண்ணா
தெய்வம் நீயல்லவோ ஓ….ஓ…..ஓ…..

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

பெண் : மண்ணில் இடம் கொண்ட
தென்னை இளங்கன்று
மண்ணைப் பிரியாதண்ணா..ஆ….ஆ…ஆ..

பெண் : மங்கை முகம் கொண்ட
மஞ்சள் நிறம் என்றும்
பெண்ணை பிரியாதண்ணா….

பெண் : தன் வீடு மறந்தாலும்
தாய் வீடு மறவாது
தன் ஆவி பிரிந்தாலும்
அண்ணாவை பிரியாது

பெண் : எங்கே இருந்தாலும் உன்னை மறவாத
உள்ளம் இதுவல்லவோ
அண்ணா உள்ளம் இதுவல்லவோ…ஓ…..

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here