Singers : Vani Jayaram and Jayachandran

Music by : Shankar Ganesh

Female : Thaen paayum velai
Sevvaana maalai
Poonthendral thaalattu paadum
Deivangal nalvaazhthu koorum

Female : Kaadhal vellam kannodu modhum
Ullam rendum ponoonjal aadum

Male : Thaen paayum velai
Sevvaana maalai
Poonthendral thaalattu paadum
Deivangal nalvaazhthu koorum

Male : Kaadhal vellam kannodu modhum
Ullam rendum ponoonjal aadum

Male : Oru kodi jenmam
Naan konda podhum
Neeyae en thunaiyaaga vendum

Female : Aaa…aaa…poovaaga naanum
Pirakkindra podhum
Paniyaaga nee potra vendum

Male : Paavai un paadhai
Adhil nizhalaaaga varuven amma

Female : Vanna poo vasantham
Nenjil thaen pozhiyum

Male : Undhan poongkarangal
Ennai maalai idum

Female : Thaen paayum velai
Male : Sevvaana maalai
Female : Poonthendral thaalattu paadum
Male : Deivangal nalvaazhthu koorum

Female : Kaadhal vellam kannodu modhum
Male : Ullam rendum ponoonjal aadum

Female : Megangangal vaanil
Inaigindra podhu
Oliveesum pudhu minnal thondrum

Male : Aaa…dhegangal rendum
Thodugindra bothu
Mogangal alai pola modhum

Female : Maiyyal konda thaiyyal
Un maarbodu vilaiyaadudhu

Male : Undhan maan vizhiyae
Sandham paadiduthae

Female : Inba kaaveriyae
Nenjil paaigirathae

Male : Thaen paayum velai
Female : Sevvaana maalai
Male : Poonthendral thaalattu paadum
Female : Deivangal nalvaazhthu koorum

Both : Kaadhal vellam kannodu modhum
Ullam rendum ponoonjal aadum

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண் : தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

ஆண் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண் : ஒரு கோடி ஜென்மம்
நான் கொண்ட போதும்
நீயே என் துணையாக வேண்டும்

பெண் : ஆஅ…..ஆஅ……பூவாக நானும்
பிறக்கின்ற போதும்
பணியாக நீ போற்ற வேண்டும்

ஆண் : பாவை உந்தன் பாதை
அதில் நிழலாக வருவேன் அம்மா

பெண் : வண்ண பூ வசந்தம்
நெஞ்சில் தேன் பொழியும்

ஆண் : உந்தன் பூங்கரங்கள்
என்னை மாலை இடும்

பெண் : தேன் பாயும் வேலை
ஆண் : செவ்வான மாலை
பெண் : பூந்தென்றல் தாலாட்டு பாடும்
ஆண் : தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
ஆண் : உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

பெண் : மேகங்கள் வானில்
இணைகின்ற போது
ஒளிவீசும் புது மின்னல் தோன்றும்

ஆண் : ஆஅ…..தேகங்கள் ரெண்டும்
தொடுகின்ற போது
மோகங்கள் அலை போல மோதும்

பெண் : மையல் கொண்ட தையல்
உன் மார்போடு விளையாடுது

ஆண் : உந்தன் மான் விழியே
சந்தம் பாடிடுதே

பெண் : இன்ப காவேரியே
நெஞ்சில் பாய்கிறதே

ஆண் : தேன் பாயும் வேலை
பெண் : செவ்வான மாலை
ஆண் : பூந்தென்றல் தாலாட்டு பாடும்
பெண் : தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

இருவர் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here