Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Thaaiyennum selvangal thaalattum deepam
Vairangal polae oli vidattum

Male : Thaaiyennum selvangal thaalattum deepam
Vairangal polae oli vidattum
Santhosam kondaadum ullangalil
Ponaana ennangal uruvaagattum
Ellorum vaazhum nilai varattum

Male : Thaaiyennum selvangal thaalattum deepam
Vairangal polae oli vidattum

Male : Nallorai varaverkkum illam undu
Naalthorum parimaara annam undu
Nallorai varaverkkum illam undu
Naalthorum parimaara annam undu
Eppodhum oli veesum kangal undu
Illai endrennaadha ullam undu

Male : Thaaiyennum selvangal thaalattum deepam
Vairangal polae oli vidattum

Male : Pabangal illaiyendru neeradungal
Panpaadum pugazh endru malar soodungal
Samudhaayam vaazh endru isai paadungal
Edhirkaalam undrendru nadamaadungal

Male : Thaaiyennum selvangal thaalattum deepam
Vairangal polae oli vidattum

Male : Engengu piranthaalum ondraagalaam
Illaadha sondhangal uruvaagalaam
Thaayaga maganaaga uravaadalaam
Thanthaigal thangaigal thunaiyaagalaam
Santhosam kondaadum ullangalil
Ponaana ennangal uruvaagattum
Ellorum vaazhum nilai varattum

Male : Thaaiyennum selvangal thaalattum deepam
Vairangal polae oli vidattum

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்

ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்

ஆண் : நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு
எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்றெண்ணாத உள்ளம் உண்டு

ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்

ஆண் : பாபங்கள் இல்லையென்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ்க … என்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்

ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்

ஆண் : எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here