Singer : Manikka Vinayagam
Music by : Vidyasagar
Male : {Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham} (2)
Male : 17 vayasu varaikum
Nee vazhum vazhkai thanae
Palottum kalam varaikum
Kuda varum
Male : Kadalora upan galiyum
Kathodu pesum alaiyum
500 mile ponalum
Thedi varum
Male : Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham
Male : Gramam than madiyil katti
Valathathu unnai
Gramatha madiyila katti
Povathu enna
Male : Sathi thandiyae
Natpum uravum
Malarnthathu angae
Samayatha pengal pathu
Mayangiyathu angae
Male : Uppu medilae adi mudithu
Sainthathum angae
Aagayam iruttu pothi
Thungiyathangae
Male : Kaiyodu alliya thanni
Viralodu kasivathu pola
Kannodu ninaivugal ellam
Kasigirathae…..
Male : Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham
Male : Nellikai adiyil
Ulla thithipagaa
Varumayin keezh latchiyam
Onnu vanthathu angae
Male : Thuku vali thalayil matti
Greedam endrai
Sontha selavil suriyan vanga
Asai kondai
Male : Sontha uravugal ilaigalai polae
Uthirnthida kandai
Vantha uravugal valar pirayaga
Valarnthida kandai
Male : Manam konda kanavugal ellam
Man panai sillugal agaa
Maru vazhvin vetriyai
Thedi odugiraiii…
Male : Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham
Male : 17 vayasu varaikum
Nee vazhum vazhkai thanae
Palottum kalam varaikum
Kuda varum
Male : Kadalora upan galiyum
Kathodu pesum alaiyum
500 mail ponalum
Thedi varum
பாடகர் : மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : { தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம் } (2)
ஆண் : 17 வயசு
வரைக்கும் நீ வாழும்
வாழ்க்கை தானே
பாலூட்டும் காலம்
வரைக்கும் கூட வரும்
ஆண் : கடலோர உபன்
கழியும் காதோடு பேசும்
அலையும் 500 மைல்
போனாலும் தேடி வரும்
ஆண் : தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண் : கிராமம் தன்
மடியில் கட்டி வளத்தது
உன்னை கிராமத்தை
மடியில கட்டி போவது
என்ன
ஆண் : சாதி தாண்டியே
நட்பும் உறவும் மலர்ந்தது
அங்கே சமயத்தை பெண்கள்
பாத்து மயங்கியது அங்கே
ஆண் : உப்பு மேட்டிலே
ஆடி முடித்து சாய்ந்ததும்
அங்கே ஆகாயம் இருட்டு
போத்தி தூங்கியதங்கே
ஆண் : கையோடு அள்ளிய
தண்ணி விரலோடு கசிவது
போல கண்ணோடு நினைவுகள்
எல்லாம் கசிகிறதே
ஆண் : தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண் : நெல்லிக்காய்
அடியில் உள்ள தித்திப்பாக
வறுமையின் கீழ் லட்சியம்
ஒன்னு வந்தது அங்கே
ஆண் : தூக்கு வாலி
தலையில் மாட்டி
கிரீடம் என்றாய்
சொந்த செலவில்
சூரியன் வாங்க ஆசை
கொண்டாய்
ஆண் : சொந்த உறவுகள்
இலைகளை போலே
உதிர்ந்திட கண்டாய்
வந்த உறவுகள் வளர்
பிறையாக வளர்ந்திட
கண்டாய்
ஆண் : மனம் கொண்ட
கனவுகள் எல்லாம் மண்
பானை சில்லுகள் ஆக
மறு வாழ்வின் வெற்றியை
தேடி ஓடுகிறாய்
ஆண் : தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண் : 17 வயசு
வரைக்கும் நீ வாழும்
வாழ்க்கை தானே
பாலூட்டும் காலம்
வரைக்கும் கூட வரும்
ஆண் : கடலோர உபன்
கழியும் காதோடு பேசும்
அலையும் 500 மைல்
போனாலும் தேடி வரும்