Singers : P. Susheela, K. S. Chithra and Harini
Music by : N. R. Raghunanthan
Female : Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Female : Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Female : Vannavanna komalamae
Valadhukai maambazhamae!
Inamperutha vamsathil
Sanamperutha kudumbathil
Aaraam thirumaganaai
Aalavandha chozha mannaa
Female : Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Female : Pullimaan kombaiyila
Pulivandhu pogudhinnu
Ponvael kaivaangi
Puliyeriya vandhavanae!…
Female : Chitherumbu kadichaalum
Chithappaa varuvaaga
Thaangi tholmaatha
Thaai maaman varuvaaga
Female : Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Female : Thaathaamaar thookkivachaa
Thaadimudi kuthuminnu
Alli alli maarbanaikka
Aithamaar varuvaaga
Female : Paattu pala padichu
Paalsooru oottividum
Koottu kudumbamadaa
Kulavilakkae kannurangu
Kulavilakkae kannurangu
Female : Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Aaraaroo aarirooo
Aan azhagae aarirooo
Female : Chinnanjiru piraiyae
Sivappukkal rathinamae!…
Enna kalanjiyamae
Yaelam poo vaasagamae!…
Female : Appan veliyooru
Aathaa thaniyaalu
Koottu kudumbam ippo
Kudaisaanju poanadhadaa
Female : Thaaimaaman pozhappukku
Thaaraavi poyittaaga
Chithappaa ellaarum
Cheemaiyila irukkaaga
Female : On pola selvandhan
Olagathil kandadhilla
En pola ezhaiyanee
Engaachum kandadhundaa
Female : Echippaal theendhadhadaa
Irundhavarai oottivitten
Michappaal oorumvarai
Minminiyae kannurangu
Minminiyae kannurangu
Female : Maanikka maamaniyae!
Maarkkandan puthiranae!
Sor ootta sondhamilla
Thottilida bandhamilla
Naadhiyatha kudumbathil
Naayagamaa vandhavanae
Mmm…mmm…mmm…mm…
Female : Aathaa oru moolaiyila
Appan oru moolaiyila
Kaathaa parakkuraaga
Governmenttu vaelaiyila
Female : Video paarthabadi
Velaikkaari thooliyaatta
Audio kettabadi
Aadhavanae kannurangu
Female : Othaiyila porandhavanae
Unakkaarum thunaiyilla
Vidhaiyellaam kathukkittu
Velinaadu pomaganae!
Female : Londan thirumagaloo
Los angels marumagaloo
Petha thaai thagappanukku
Pathirikkai kodumaganae!
Pathirikkai kodumaganae!……
Mmmm ..mmm..mmm..mmm….
பாடகிகள் : பி. சுஷீலா, கே. எஸ். சித்ரா மற்றும் ஹரிணி
இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
பெண் : ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
பெண் : ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
பெண் : வண்ணவண்ணக் கோமளமே!
வலதுகை மாம்பழமே!
இனம்பெருத்த வம்சத்தில்
சனம்பெருத்த குடும்பத்தில்
ஆறாம் திருமகனாய்
ஆளவந்த சோழமன்னா
பெண் : ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
பெண் : புள்ளிமான் கோம்பையில
புலிவந்து போகுதின்னு
பொன்வேல் கைவாங்கிப்
புலியெறிய வந்தவனே!
பெண் : சித்தெறும்பு கடிச்சாலும்
சித்தப்பா வருவாக
தாங்கித் தோள்மாத்தத்
தாய்மாமன் வருவாக
பெண் : ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
பெண் : தாத்தாமார் தூக்கிவச்சாத்
தாடிமுடி குத்துமின்னு
அள்ளி அள்ளி மார்பணைக்க
ஐத்தமார் வருவாக
பெண் : பாட்டுப் பலபடிச்சுப்
பால்சோறு ஊட்டிவிடும்
கூட்டுக் குடும்பமடா
குலவிளக்கே கண்ணுறங்கு
குலவிளக்கே கண்ணுறங்கு
பெண் : ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
ஆராரோ ஆரிரோ
ஆண் அழகே ஆரிரோ
பெண் : சின்னஞ்சிறு பிறையே
சிவப்புக்கல் ரத்தினமே!
எண்ணக் களஞ்சியமே
ஏலம்பூ வாசகமே!
பெண் : அப்பன் வெளியூரு
ஆத்தா தனியாளு
கூட்டுக் குடும்பம் இப்போ
குடைசாஞ்சு போனதடா
பெண் : தாய்மாமன் பொழப்புக்குத்
தாராவி போயிட்டாக
சித்தப்பா எல்லாரும்
சீமையில இருக்காக
பெண் : ஒம்போலச் செல்வந்தன்
ஒலகத்தில் கண்டதில்ல
எம்போல ஏழையைநீ
எங்காச்சும் கண்டதுண்டா
பெண் : எச்சிப்பால் தீந்ததடா
இருந்தவரை ஊட்டிவிட்டேன்
மிச்சப்பால் ஊறும்வரை
மின்மினியே கண்ணுறங்கு
மின்மினியே கண்ணுறங்கு
பெண் : மாணிக்க மாமணியே!
மார்க்கண்டன் புத்திரனே!
சோறூட்டச் சொந்தமில்ல
தொட்டிலிட பந்தமில்ல
நாதியத்த குடும்பத்தில்
நாயகமா வந்தவனே
ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….
பெண் : ஆத்தா ஒரு மூலையில
அப்பன் ஒரு மூலையில
காத்தாப் பறக்குறாக
கவர்மெண்ட்டு வேலையில
பெண் : வீடியோ பார்த்தபடி
வேலைக்காரி தூளியாட்ட
ஆடியோ கேட்டபடி
ஆதவனே கண்ணுறங்கு
பெண் : ஒத்தையில பொறந்தவனே
உனக்காரும் துணையில்ல
வித்தையெல்லாம் கத்துக்கிட்டு
வெளிநாடு போமகனே!
பெண் : லண்டன் திருமகளோ
லாஸ்ஏஞ்சல்ஸ் மருமகளோ
பெத்ததாய் தகப்பனுக்குப்
பத்திரிகை கொடுமகனே!…
பத்திரிகை கொடுமகனே!…
ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….