Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Kannavan sonnaanae
Kadamaiyinai seithu vidu
Palanai vidu endraane
Kadamaiyinai seithaanae
Kodumaiyinai kandapadi
Kanneeril nindraenae…..
Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
Kadamaiyil purappatta vegam engu pogum
Idhil vaazhkkai thaagam….
Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
Male : Kaiyil oru vilangu karuththil oru vilangu
Kaalil oru vilangu kazhuththil oru vilangu
Iraivaa nimmathi vazhangu
Male : Mulvaeli ellai aasaigal mullai
Palanooru thollai bhagavaanum illai
Yaar seitha paavam idhupondra pillai
Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
Kadamaiyil purappatta vegam engu pogum
Idhil vaazhkkai thaagam….
Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
Male : Mazhai pondra kangal kodai pol ullam
Varugindra thunbam thaniyaatha vellam
Kadankaara sontham enakkenna illam
Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
Male : Kadhalikku vazhi solvathaa
Kadamaiyilirunthu vilagi selvathaa
Male : Ilaiya thalaimuraikku bathil solvathaa
Engum en kudumpaththai thaangi pidippathaa
Male : Kurudaaga nindraal kaatchigal illai
Kurudaaga nindraal kaatchigal illai
Kozhakaaranaanaal kavalaigal illai
Manithaabimaanam naan konda thollai
Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
Kadamaiyil purappatta vegam engu pogum
Idhil vaazhkkai thaagam….
Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கண்ணனவன் சொன்னானே
கடமையினைச் செய்து விடு
பலனை விடு என்றானே
கடமையினைச் செய்தேனே……
கொடுமையினைக் கண்டபடி
கண்ணீரில் நின்றேனே…….
ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும்
இதில் வாழ்க்கை தாகம்….
ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
ஆண் : கையில் ஒரு விலங்கு கருத்தில் ஒரு விலங்கு
காலில் ஒரு விலங்கு கழுத்தில் ஒரு விலங்கு
இறைவா நிம்மதி வழங்கு….
ஆண் : முள்வேலி எல்லை ஆசைகள் முல்லை
பலநூறு தொல்லை பகவானும் இல்லை
யார் செய்த பாவம் இதுபோன்ற பிள்ளை
ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும்
இதில் வாழ்க்கை தாகம்….
ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
ஆண் : மழை போன்ற கண்கள் கோடை போல் உள்ளம்
வருகின்ற துன்பம் தணியாத வெள்ளம்
கடன்காரச் சொந்தம் எனக்கென்ன இல்லம்
ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
ஆண் : காதலிக்கு வழி சொல்வதா
கடமையிலிருந்து விலகிச் செல்வதா
ஆண் : இளைய தலைமுறைக்குப் பதில் சொல்வதா
எங்கும் என் குடும்பத்தைத் தாங்கிப் பிடிப்பதா
ஆண் : குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை
குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை
குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை
குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை
கொலகாரனானால் கவலைகள் இல்லை
மனிதாபிமானம் நான் கொண்ட தொல்லை
ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும்
இதில் வாழ்க்கை தாகம்….
ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்