Singer : R. Guru Ayya Durai

Music by : Sundaramurthy KS

Lyrics by : Yegathasi

Dialogues : ………..

Humming : …………..

Male : Thalaiyatti pesurappo
Thandatti kaadhazhagu
Thandatti potta pulla
Veerapaandi therazhagu

Male : Viludhaadum kili pola
Kaadhodu adhu thongum
Thandatti kadhaiyakelu
Thennattu nilamengum

Male : Porandhappo kaadhukuthi
Pottuvitta thandatti
Porandhappo kaadhukuthi
Pottuvitta thandatti

Male : Vaazhkai kadasi varai
Kooda varum kaikatti
Vaazhkai kadasi varai
Kooda varum kaikatti

Male : Kazhuthu neenda pombaalaikku
Kaathilaadum thandatti
Aalu konjam kuttaiyinna
Tholathottum thandatti

Male : Aatta matta vithukooda
Vaangi thandha thandatti
Appam aatha pola than
Koodairukkum thandatti

Male : Tharathula osandha naga
Thandattithaan paaru
Oru sirppam pola thandattiya
Senjavan thaan yaaru

Male : Ettuthikkum thamukkuadikkum
Thangatha nee paaru
Ada erumbhu suthi pakkanuna
Vaanganundaa caaru

Male : Kaadhu valatha pombalaikku
Kannupadum azhagirukkum
Kasalavu valatha kaadhil
Nela parkka edam irukkum

Male : Pilla perum kastam pola
Kaadhu rendu valakkanumae
Thandatti thaan potta ponna
Saamiyathaan madhikkanumae

Male : Kaadu kara velaiyilum
Karuthidadha thandatti
Kaasu dhuttu illanaalum
Kazhatidadha thandatti

Male : Tiruchy madhura thaeni ellam
Veettukkoru thandatti
Thirumbugira dhisai ellam
Thiriyuminga thandatti

Male : Andha kaalam atha mava
Thandatti thaan potta
Oru maargamaaga aambalainga
Nippayangalae kootta

Male : Moolikkadhu pombalaiyum
Thandatti than ketta
Adha moodivechu maraikkama
Paadurenae patta

Male : Aiyanaaru arasan maaru
Ivalugalukum neenda kaadhu
Aambalaigalukkum azhagirukkum
Thandattiya potta podhu

Male : Kaathu karuppu andaathu
Karuppanodu pera sonna
Thattiyandhaan vandhurumae
Thandattiya pottu ninna

Male : Katta meesai karanukkum
Pottiyindha thandatti
Kaara veettukkari kaadhil
Thooliyaadum thandatti
Appan veettu seedhanama
Aninji varum thandatti
Oramjaaram ninnakka kooda
Ooru pakkum thandatti

பாடகர் : ஆர். குரு ஐயா துரை

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : ஏகாதசி

வசனம் : ……………..

முனகல் : …………….

ஆண் : தலையாட்டி பேசுறப்போ
தண்டட்டிக் காதழகு
தண்டட்டி போட்ட புள்ள
வீரபாண்டி தேரழழு

ஆண் : விழுதாடும் கிளிபோல
காதோட அது தொங்கும்
தண்டட்டி கதையக்கேளு
தென்னாட்டு நிலமெங்கும்

ஆண் : பொறந்தப்போ காதுகுத்தி
போட்டுவிட்ட தண்டட்டி
பொறந்தப்போ காதுகுத்தி
போட்டுவிட்ட தண்டட்டி

ஆண் : வாழ்க்கை கடைசி வரை
கூட வரும் கைகட்டி
வாழ்க்கை கடைசி வரை
கூட வரும் கைகட்டி

ஆண் : கழுத்து நீண்ட பொம்பளைக்கு
காத்திலாடும் தண்டட்டி
ஆளு கொஞ்சம் குட்டையின்னா
தோளத்தட்டும் தண்டட்டி

ஆண் : ஆட்ட மாட்ட வித்துக்கூட
வாங்கி தந்த தண்டட்டி
அப்பன் ஆத்தா போலத்தான
கூடருக்கும் தண்டட்டி

ஆண் : தரத்துல ஒசந்த நக
தண்டட்டிதான பாரு
ஒரு சிற்பம் போல தண்டட்டிய
செஞ்சவன்தான் யாரு

ஆண் : எட்டுத்திக்கும் தமுக்கடிக்கும்
தங்கத்த நீ பாரு
அட எறும்பு சுத்தி பாக்குனுன்னா
வாங்கணுன்டா காரு

ஆண் : காது வளத்த பொம்பளைக்கு
கண்ணுபடும் அழகிருக்கும்
காசளவு வளத்த காதில்
நெலா பார்க்க எடமிருக்கும்

ஆண் : பிள்ளப்பெறும் கஷ்டம் போல
காது ரெண்ட வளக்கணுமே
தண்டட்டிதான் போட்ட பொண்ண
சாமியாத்தான் மதிக்கணுமே

ஆண் : காடு கர வேலையிலும்
கருத்திடாத தண்டட்டி
காது துட்டு இல்லனாலும்
கழட்டிடாத தண்டட்டி

ஆண் : திருச்சி மதுர தேனியெல்லாம்
வீட்டுக்கொரு தண்டட்டி
திரும்புகிற தெசையெல்லாம்
திரியுமிங்க தண்டட்டி

ஆண் : அந்த காலம் அத்த மவ
தண்டட்டிதான் போட்டா
ஒரு மார்க்கமாக ஆம்பளைங்க
நிப்பாய்ங்களே கூட்டா

ஆண் : மூளிக்காது பொம்பளையும்
தண்டட்டிதான் கேட்டா
அவ மூடிவச்ச மறைக்காம
பாடுறேனே பாட்டா

ஆண் : அய்யனாரு அரசன் மாரு
இவுகளுக்கும் நீண்ட காது
ஆம்பளைக்கும் அழகிருக்கும்
தண்டட்டிய போட்ட போது

ஆண் : காத்துக் கருப்பு அண்டாது
கருப்பனோட பேரச்சொன்னா
தாட்டியந்தான் வந்துருமே
தண்டட்டிய போட்டு நின்னா

ஆண் : கட்டமீசைக் காரனுக்கும்
போட்டியிந்த தண்டட்டி
கார வீட்டுக்காரி காதில்
தூளியாடும் தண்டட்டி

ஆண் :அப்பன் வீட்டு சீதனமா
அணிஞ்சி வரும் தண்டட்டி
ஓரஞ்சாரம் நின்னாக்க கூட
ஊரு பாக்கும் தண்டட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here