Thanakkoru Sorgathai Song Lyrics is a track from Vazha Ninaithal Vazhalam – Tamil Movie 1978, Starring Jai Sankar, Major Sundararajan, Thengai Srinivasan, Sripriya, Jayadevi and Manorama. This song was sung by Vani Jairam, Music composed by Ilayaraja and lyrics work penned by Kannadasan and Panchu Arunachalam.

Singer : Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Female : Aaa…..aaa….aa….aa…aa…aah….
Aaa…..aaa….aa….aa…aa…aah….

Female : Thanakkoru sorkkaththai amaiththa devathai
Santhegam irunthaal paarungal
Thanakkoru sorkkaththai amaiththa devathai
Santhegam irunthaal paarungal
Thadai poda manithargalae neengalo
Oru vaanum nilavum sera yaarai ketpathu

Chorus : Thanakkoru sorkkaththai amaiththa devathai
Santhegam irunthaal paarungal

Female : Arasanin maganalla ambikapathi
Amara kaaviyam paadinaal amaravathi
Iraivanin saalaiyil vithitha vithi
Arasan thalaiyittaal adhuthaan kadhi
Adhuthaan kadhi

Female : Pavalangal ellaam malaiyil piranthum
Malaikavai sontham illai
Oru pandaaram kooda aninthidakoodum
Adhil oru thavarum illai

Chorus : Pavalangal ellaam malaiyil piranthum
Malaikavai sontham illai
Oru pandaaram kooda aninthidakoodum
Adhil oru thavarum illai

Female : Panamulla idam ulagai aattalaam
Paguththarivulla uravum aadumaa manamae
Nadhi sellum vazhi thannai yaar sonnathu
Oru vaanum nilavum sera yaarai ketpathu

Chorus : Thanakkoru sorkkaththai amaiththa devathai
Santhegam irunthaal paarungal

Female : Kadhal enbathu devanin sannithi
Thadaiyendru vanthaal mudivuthaan nimmathi
Thanthaiyin perumaiyaa magalin narkathi
Thaanendru ninaiporkku
Illaiyor santhathi illaiyor santhathi

Female : Kani vittathodu kadamai mudinthathu
Kaigalai kazhuvungal
Antha kaniyai azhagiya kiliyondru
Rasikkattum kangalai moodungal

Female : Ulagamum idhil ulunthu pondrathu
Maranamum idhil kadugu pondrathu maname…ae…
Maranaththilthaan ini pirivenpathu
Oru vaanum nilavum sera yaarai ketpathu

Chorus : Thanakkoru sorkkaththai amaiththa devathai
Santhegam irunthaal paarungal
Female : Thadai poda manithargalae neengalo
Oru vaanum nilavum sera yaarai ketpathu

Chorus : Thanakkoru sorkkaththai amaiththa devathai
Santhegam irunthaal paarungal
Thanakkoru sorkkaththai amaiththa devathai
Santhegam irunthaal paarungal

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆஅ…அ.ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆஹ்….
ஆஅ…அ.ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆஹ்….

பெண் : தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

குழு : தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண் : அரசனின் மகனல்ல அம்பிகாபதி
அமர காவியம் பாடினாள் அமராவதி
இறைவனின் சாலையில் விதித்த விதி
அரசன் தலையிட்டால் அதுதான் கதி
அதுதான் கதி

பெண் : பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும்
மலைக்கவை சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

குழு : பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும்
மலைக்கவை சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

பெண் : பணமுள்ள இடம் உலகை ஆட்டலாம்
பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா மனமே
நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

குழு : தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண் : காதல் என்பது தேவனின் சன்னிதி
தடையென்று வந்தால் முடிவுதான் நிம்மதி
தந்தையின் பெருமையா மகளின் நற்கதி
தானென்று நினைப்போர்க்கு
இல்லையோர் சந்ததி இல்லையோர் சந்ததி

பெண் : கனி விட்டதோடு கடமை முடிந்தது
கைகளைக் கழுவுங்கள்
அந்தக் கனியை அழகிய கிளியொன்று
ரசிக்கட்டும் கண்களை மூடுங்கள்

பெண் : உலகமும் இதில் உளுந்து போன்றது
மரணமும் இதில் கடுகு போன்றது மனமே…ஏ…..
மரணத்தில் தான் இனி பிரிவென்பது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

குழு : தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண் : தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

குழு : தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here