Singers : T. M. Soundarajan and Seerkazhi Govindarajan

Music by : D. B. Ramachandran

Male : Hahahaha
Thanakku thanakku endru odhukaadhae
Seidha dharmam thalai kaakkum marakkadhae
Thanakku minji thaan thaanam engindra
Thathuvam poi adhai madhikkadhae

Male : Hahahaha
Irukku irukkuthendru kodukkadhae panam
Illaadha kalathil thavikkadhae
Thanakku minjithaan thaanam engindra
Thathuvam mei adhai marakkadhae

Male : Thanakku thanakku endru odhukaadhae
Seidha dharmam thalai kaakkum marakkadhae

Male : Thannalam illaa manidharin nenjil
Kadavul irukkindraan
Thannalam illaa manidharin nenjil
Kadavul irukkindraan
Nalla dharmam seibavanin kaigalin vazhiyae
Karnan sirikkindraan

Male : Koduthavan ellaam sarithirathodu
Sarithiram aagindraan
Koduthavan ellaam sarithirathodu
Sarithiram aagindraan
Aduthavan ellaam therupuzhu polae
Karipugai aagindraan

Male : Irukku irukkuthendru kodukkadhae panam
Illaadha kalathil thavikkadhae

Male : Kanja kazhudhaiyum kaasu irundhaal
Karnan aagi viduvaan
Kanja kazhudhaiyum kaasu irundhaal
Karnan aagi viduvaan
Indha kazhisaadai ulagil panamudaiyorkku
Kadavulum bayapaduvaan

Male : Endha kaalamum irukkira varai thaan
Oorukku ubayogam
Endha kaalamum irukkira varai thaan
Oorukku ubayogam
Adhai izhandhuvittaloo karnan endraalum
Kidapadhu avamanam

Male : Thanakku thanakku endru odhukaadhae
Seidha dharmam thalai kaakkum marakkadhae

Male : Aduthavan madhikka kodupathu ellaam
Kodiyinil seraadhu
Aduthavan madhikka kodupathu ellaam
Kodiyinil seraadhu
Alandhu kodukkiravan irukkira varaikkum
Dharmam valaradhu

Male : Irupadhaiyellam kodukkira manidharkku
Nilaikkira pugazh irukkum
Irupadhaiyellam kodukkira manidharkku
Nilaikkira pugazh irukkum
Adhai thadukkira paavikku kaiyodu kaalum
Virathathum peyar marakkum

Male : Aattril pottaalum alandhu podendru
Pazhamozhi irukkiradhu
Aattril pottaalum alandhu podendru
Pazhamozhi irukkiradhu
Alavukku meeri kodupathu ellaam
Vishamaai pogirathu

Male : Vidhaikku illamal vilaindhadhai ellaam
Virpathu udhavaadhu
Vidhaikku illamal vilaindhadhai ellaam
Virpathu udhavaadhu
Vishayam therindhavarin vaarthaigal mattum
Eppavum thavaraadhu

Male : Thanakku thanakku endru odhukkadhae

Male : Irukku irukkthendru kodukkadhae
Panam illadha kaalathil thavikkadhae………….

பாடகர்கள் :  டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. பீ. ராமசந்திரன்

ஆண் : ஹாஹாஹா
தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த
தர்மம் தலை காக்கும் மறக்காதே
தனக்கு மிஞ்சி தான் தானம் என்கின்ற
தத்துவம் பொய் அதை மதிக்காதே

ஆண் : ஹாஹாஹா
இருக்கு இருக்குதென்று கொடுக்காதே பணம்
இல்லாத காலத்தில் தவிக்காதே
தனக்கு மிஞ்சிதான் தானம் என்கின்ற
தத்துவம் மெய் அதை மறக்காதே…

ஆண் : தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த
தர்மம் தலை காக்கும் மறக்காதே

ஆண் : தன்னலம் இல்லா மனிதரின் நெஞ்சில்
கடவுள் இருக்கின்றான்
தன்னலம் இல்லா மனிதரின் நெஞ்சில்
கடவுள் இருக்கின்றான்
நல்ல தர்மம் செய்பவனின் கைகளின் வழியே
கர்ணன் சிரிக்கின்றான்

ஆண் : கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு
சரித்திரம் ஆகின்றான்
கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு
சரித்திரம் ஆகின்றான்
அடுத்தவன் எல்லாம் தெருப்புழு போலே
கரிப்புகை ஆகின்றான்….

ஆண் : இருக்கு இருக்குதென்று கொடுக்காதே பணம்
இல்லாத காலத்தில் தவிக்காதே

ஆண் : கஞ்ச கழுதையும் காசு இருந்தால்
கர்ணன் ஆகி விடுவான்
கஞ்ச கழுதையும் காசு இருந்தால்
கர்ணன் ஆகி விடுவான்
இந்த கழிசடை உலகில் பணமுடையோர்க்கு
கடவுளும் பயப்படுவான்

ஆண் : எந்த காலமும் இருக்கிற வரைதான்
ஊருக்கு உபயோகம்
எந்த காலமும் இருக்கிற வரைதான்
ஊருக்கு உபயோகம்
அதை இழந்துவிட்டாலோ கர்ணன் என்றாலும்
கிடைப்பது அவமானம்

ஆண் : தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த
தர்மம் தலை காக்கும் மறக்காதே

ஆண் : அடுத்தவன் மதிக்க கொடுப்பது எல்லாம்
கொடையினில் சேராது
அடுத்தவன் மதிக்க கொடுப்பது எல்லாம்
கொடையினில் சேராது
அளந்து கொடுக்கிறவன் இருக்கிற வரைக்கும்
தர்மம் வளராது

ஆண் : இருப்பதையெல்லாம் கொடுக்கிற மனிதர்க்கு
நிலைக்கிற புகழ் இருக்கும்
இருப்பதையெல்லாம் கொடுக்கிற மனிதர்க்கு
நிலைக்கிற புகழ் இருக்கும்
அதை தடுக்கிற பாவிக்கு கையோடு காலும்
விரைத்ததும் பெயர் மறக்கும்

ஆண் : ஆற்றில் போட்டாலும் அளந்து போடென்று
பழமொழி இருக்கிறது
ஆற்றில் போட்டாலும் அளந்து போடென்று
பழமொழி இருக்கிறது
அளவுக்கு மீறி கொடுப்பது எல்லாம்
விஷமாய் போகிறது

ஆண் : விதைக்கு இல்லாமல் விளைந்ததை எல்லாம்
விற்பது உதவாது
விதைக்கு இல்லாமல் விளைந்ததை எல்லாம்
விற்பது உதவாது
விஷயம் தெரிந்தவரின் வார்த்தைகள் மட்டும்
எப்பவும் தவறாது….

ஆண் : தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே

ஆண் : இருக்கு இருக்குதென்று கொடுக்காதே..
பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here