Singer : T. M. Soundarajan
Music by : G. Ramanathan
Male : Thandaiyani vendaiyangkinkini sathangaiyum
Than kazhal silambudan konjavae
Thandaiyani vendaiyangkinkini sathangaiyum
Than kazhal silambudan konjavae
Nin thandhaiyinai mun parindhu inbavuri kondu nan
Sandhodam anaindhu nindra anbu polae
Male : Kandura kadambudan sandha magudangalum
Kanja malar sengaiyum sindhu velum
Kangalum mugangalum chandira nirangalum
Kann kulira endran munn sandhiyavo
Male : Thandaiyani vendaiyangkinkini sathangaiyum
Than kazhal silambudan konjavae
Male : Pundarigar andamum konda bagirandamum
Pongi ezha vengalam konda podhu
Ponn kiri ena sirandhu enginum valarndhu munn
Pundarigar thandhaiyum sindhai koora
Male : Pundarigar andamum konda bagirandamum
Pongi ezha vengalam konda podhu
Ponn kiri ena sirandhu enginum valarndhu munn
Pundarigar thandhaiyum sindhai koora
Male : Konda nadanam padham
Sendhililum endran munn
Konji nadanam kolum kandhavelae
Kongai kura mangaiyin sandha manam undidum
Kumbamuni kumbidum thambiraanae
பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : தண்டையணி வெண்டையங்
கிண்கிணி சதங்கையும்
தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே
தண்டையணி வெண்டையங்
கிண்கிணி சதங்கையும்
தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே
நின் தந்தையினை முன் பரிந்து
இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே
ஆண் : கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்ச மலர் செங்கையும் சிந்து வேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன் முன் சந்தியாவோ
ஆண் : தண்டையணி வெண்டையங்
கிண்கிணி சதங்கையும்
தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே
ஆண் : புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கி எழ வெங்களம் கொண்ட போது
பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்
ஆண் : புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கி எழ வெங்களம் கொண்ட போது
பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்
ஆண் : கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன்
கொஞ்சி நடனம் கொளும் கந்தவேலே
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!