Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Male : Thangasurangam povadhu
Endha thattaanai paarkka
Sandhana kinnam povadhu
Endha kalyanam pesa

Male : Kunguma saaru povadhu
Endha kudumbathil vaazha
Gopura kalasam povadhu
Endha nenjil oli veesa

Male : Nee pona pinnae ini
Naanenna kannae
Un nizhalaaga sikki kollavo
Nee pona pinnae ini
Naan enna kannae
Un nizhalaga sikki kollavo

Male : Neiyai potta koondhal thannai
Alli alli pinni pinni
Neiyai potta koondhal thannai
Alli alli pinni pinni
Poopola palli kollavo

Male : Thangasurangam povadhu enge
Female : Thattaanai paarkka
Male : Sandhana kinnam povadhu enge
Female : Kalyanam pesa

Male : Kunguma saaru povadhu enge
Female : Kudumbathil vaazha
Male : Gopura kalasam povadhu enge
Female : Nenjil oli veesa

Female : Paavadai endrum en
Poovadai endrum
Ne paadatha paadal illaiyo
Paavadai endrum en
Poovadai endrum
Ne paadatha paadal illaiyo

Female : Pakkam vandhu thottu thottu
Vetkam kooda ketta pinnum
Pakkam vandhu thottu thottu
Vetkam kooda ketta pinnum
Kalyaana ennamillaiyo

Male : Thangasurangam povadhu enge
Female : Thattaanai paarkka
Male : Sandhana kinnam povadhu enge
Female : Kalyanam pesa

Male : Kunguma saaru povadhu enge
Female : Kudumbathil vaazha
Male : Gopura kalasam povadhu enge
Female : Nenjil oli veesa

Male : Aalaana pengal adhu naalanathendru
Manam kaanamal ponadhillaiyae
Aalaana pengal adhu naalanathendru
Manam kaanamal ponadhillaiyae

Male : Aasai vittu pogum munbu
Maalai katti pottaal enna
Aasai vittu pogum munbu
Maalai katti pottaal enna
Poomaalai panjamillaiyae

Female : Thangasurangam povadhu
Endha thattaanai paarkka
Male : Ahaa

Female : Sandhana kinnam povadhu
Endha kalyanam pesa
Male : Hae haei

Female : Kunguma saaru povadhu
Endha kudumbathil vaazha
Male : Hae haei

Female : Gopura kalasam povadhu
Endha nenjil oli veesa
Male : Haei

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தங்கச்சுரங்கம் போவது
எந்தத் தட்டானைப் பார்க்க
சந்தனக் கிண்ணம் போவது
எந்தக் கல்யாணம் பேச

ஆண் : குங்குமச் சாறு போவது
எந்த குடும்பத்தில் வாழ
கோபுரக் கலசம் போவது
எந்த நெஞ்சில் ஒளி வீச…..

ஆண் : நீ போன பின்னே இனி
நானென்ன கண்ணே
உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ
நீ போன பின்னே இனி
நானென்ன கண்ணே
உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ

ஆண் : நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை
அள்ளி அள்ளிப் பின்னிப் பின்னிப்
நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை
அள்ளி அள்ளிப் பின்னிப் பின்னிப்
பூப்போல பள்ளி கொள்ளவோ….

ஆண் : தங்கச்சுரங்கம் போவது எங்கே
பெண் : தட்டானைப் பார்க்க
ஆண் : சந்தனக் கிண்ணம் போவது எங்கே
பெண் : கல்யாணம் பேச
ஆண் : ஹோ குங்குமச் சாறு போவது எங்கே
பெண் : குடும்பத்தில் வாழ
ஆண் : கோபுரக் கலசம் போவது எங்கே
பெண் : நெஞ்சில் ஒளி வீச…..

பெண் : பாவாடை என்றும் என்
பூவாடை என்றும்
நீ பாடாத பாடல் இல்லையோ
பாவாடை என்றும் என்
பூவாடை என்றும்
நீ பாடாத பாடல் இல்லையோ

பெண் : பக்கம் வந்து தொட்டுத் தொட்டு
வெட்கம் கூடக் கெட்ட பின்னும்
பக்கம் வந்து தொட்டுத் தொட்டு
வெட்கம் கூடக் கெட்ட பின்னும்
கல்யாண எண்ணமில்லையோ…..

ஆண் : தங்கச்சுரங்கம் போவது எங்கே
பெண் : தட்டானைப் பார்க்க
ஆண் : சந்தனக் கிண்ணம் போவது எங்கே
பெண் : கல்யாணம் பேச
ஆண் : ஹோ குங்குமச் சாறு போவது எங்கே
பெண் : குடும்பத்தில் வாழ
ஆண் : கோபுரக் கலசம் போவது எங்கே
பெண் : நெஞ்சில் ஒளி வீச…..

ஆண் : ஆளான பெண்கள் அது நாளானதென்று
மணம் காணாமல் போனதில்லையே
ஆளான பெண்கள் அது நாளானதென்று
மணம் காணாமல் போனதில்லையே

பெண் : ஆசை விட்டுப் போகும் முன்பு
மாலைக் கட்டி போட்டாலென்ன
ஆசை விட்டுப் போகும் முன்பு
மாலைக் கட்டி போட்டாலென்ன
பூமாலை பஞ்சமில்லையே…..

பெண் : தங்கச்சுரங்கம் போவது
இந்தத் தட்டானைப் பார்க்க

ஆண் : ஆஹா

பெண் : சந்தனக் கிண்ணம் போவது
இந்தக் கல்யாணம் பேச

ஆண் : ஹேஹேய்

பெண் : குங்குமச் சாறு போவது
இந்த குடும்பத்தில் வாழ

ஆண் : ஹேஹேய்

பெண் : கோபுரக் கலசம் போவது
இந்த நெஞ்சில் விளையாட…..

ஆண் : ஹேய் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here