Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaidyanathan

Female : Aaruvayal kaadu angamellaam thanga nagai
Saerum uravinangal selvamellam irunthaalum
Vaazhugindra vaazhkai valamaamoo thirumurugaa
Seeraar kanavanai pol sirapaamoo vel murugaa vel murugaa

Female : Thangam peridhendru ninainthaen muruga
Thangidum thunaivanai pirinthaen muruga
Thangam peridhendru ninainthaen muruga
Thangidum thunaivanai pirinthaen muruga
Mannavan perumaiyai maranthaen murugaa
Mannavan perumaiyai maranthaen murugaa
Unnillum uyarvendru unarnthaen murugaa
En mannavan unnilum uyarvae murugaa

Female : Thangam peridhendru ninainthaen muruga
Thangidum thunaivanai pirinthaen muruga

Female : Valli irunthenna nee illai endraal
Aaa….aaa….aa…
Valli irunthenna nee illai endraal
Indha vanji irundhenna avan illai endraal
Valli irunthenna nee illai endraal
Indha vanji irundhenna avan illai endraal
Saarathilum saaram nirainthathu samsaaram
Saarathilum saaram nirainthathu samsaaram
Thaarathirkkae kanavan thaanae aadhaaram
Thaarathirkkae kanavan thaanae aadhaaram

Female : Thangam peridhendru ninainthaen muruga
Thangidum thunaivanai pirinthaen muruga

Female : Aarupadai veedum arugarugae vandhaalum
Mangai en padai veedu manathavan thaan thirumurugaa
Ethanai thaan kungumam un sannithiyil irundhaalum
Ethanai thaan kungumam un sannithiyil irundhaalum
Aththaanin kungumam pol aavathundoo vel muruga
En aththaanin kungumam pol aavathundoo vel muruga vel muruga

Female : Ponnnagaiyai ninainthu punnnagai izhanthaenae
Poocharangal serthu poovinai maranthaenae
Kannagaiyaal pirantha mannil piranthaenae
Kann avan endru sollum kanavanai pirinthaenae

Female : Aalayathu silai enakku asaiyaadho thirumurugaa

Female : Oolamidum manioosai udhavaadho vel murugaa

Female : Thaalikku vaeli nee thaaruvaiyoo thani murugaa

Female : Vel vandhu ennai kaavaadho thamizh murugaa

Female : Muruga varuga mayilae varuga

Female : Velae varuga varuga varuga varuga

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

பெண் : ஆறு வயல் காடு அங்கமெல்லாம் தங்க நகை
சேரும் உறவினங்கள் செல்வமெல்லாம் இருந்தாலும்
வாழுகின்ற வாழ்க்கை வளமாமோ திருமுருகா
சீராற் கணவனைப்போல் சிறப்பாமோ
வேல் முருகா…….வேல் முருகா……..

பெண் : தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா
மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா
உன்னிலும் உயர்வென்று உணர்ந்தேன் முருகா
என் மன்னவன் உன்னிலும் உயர்வே முருகா……

பெண் : தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

பெண் : வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்
ஆஅ……ஆஅ……ஆ…..
வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்
இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால்
வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்
இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால்
சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம்
சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம்
தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்….
தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்….

பெண் : தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

பெண் : ஆறுபடை வீடும் அருகருகே வந்தாலும்
மங்கை என் படை வீடு மணந்தவன் தான் திருமுருகா
எத்தனைதான் குங்குமம் உன் சந்நிதியில் இருந்தாலும்
எத்தனைதான் குங்குமம் உன் சந்நிதியில் இருந்தாலும்
அத்தானின் குங்குமம் போல் ஆவதுண்டோ
என் அத்தானின் குங்குமம் போல் ஆவதுண்டோ
வேல் முருகா…….. வேல் முருகா………

பெண் : பொன்னகையை நினைந்து புன்னகை இழந்தேனே
பூச்சரங்கள் சேர்த்துப் பூவினை மறந்தேனே
கண்ணகியாள் பிறந்த மண்ணில் பிறந்தேனே
கண் அவன் என்று சொல்லும் கணவனைப் பிரிந்தேனே

பெண் : ஆலயத்துச் சிலை எனக்கு அசையாதோ திருமுருகா

பெண் : ஓலமிடும் மணியோசை உதவாதோ வேல் முருகா

பெண் : தாலிக்கு வேலி தாராயோ தனி முருகா

பெண் : வேல் வந்து என்னைக் காவாதோ தமிழ் முருகா

பெண் : முருகா வருக……மயிலே வருக……

பெண் : வேலவா வருக…….வருக……வருக………வருக…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here