Singers : T. R. Mahalingam, Seerkazhi Govindarajan and S. Varalakshmi

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Male : Nanjai kazhanigalin naayaganae nee vaazhga

Male : Nadanamidum kaveri kaavalanae nee vaazhga

Female : Thanjamena varuvorkku thanjam vazhangukindra
Thanjai peruvudaiya thalaivanae nee vaazhga

Chorus : Venjamaril vettri kandu
Anjalikkum makkalukkor
Vinnuyar periya koyil thantha
Veera raja raja chozhanae nee vaazhga

Chorus : Thanjai periya koyil pallaandu vaazhgavae
Thanjai periya koyil pallaandu vaazhgavae
Thanjai periya koyil pallaandu vaazhgavae
Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae
Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae

Chorus : Thanjai periya koyil pallaandu vaazhgavae

Male : Moondru nilangalukkum mudi soottinaan
Puvanam muzhuthum puli poriththa kodi naattinaan
Moondru nilangalukkum mudi soottinaan
Puvanam muzhuthum puli poriththa kodi naattinaan

Male : Thondrum idangalil than pugazh naattinaan
Thondrum idangalil than pugazh naattinaan
Endrum chozhar paramparaikkae vazhi kaattinaan
Chozhar paramparaikkae vazhi kaattinaan
Chozhan vazhi kaattinaan…..

Female : Aayakalaigal pala nilai naattinaan
Tamil aalum aringyargalukku sabhai koottinaan
Kanni tamil aallum aringyargalukku sabhai koottinaan
Thooyavarthamar vaazhvil thunai koottinaan
Chozhan thottathaiyellaam ponnaakkinaan
Thottathaiyellaam ponnaakkinaan
Chozhan ponnaakkinaan

Male : Aram kaakka arasaalai uruvaakkinaan
Aa….aa…aa….aa….aa….aa…aa…aa….aa….aa…aa…
Aram kaakka arasaalai uruvaakkinaan
Maram kaakka padaichaalai uruvaakkinaan
Uyar kalvi koodangal uruvaakkinaan
Bakthi valarnthida aalayam uruvaakkinaan
Chozhan uruvaakkinaan…..

Chorus : Thanjai periya koyil pallaandu vaazhgavae
Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae
Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae

Chorus : Thanjai periya koyil pallaandu vaazhgavae

பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன்

மற்றும் எஸ். வரலட்சுமி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க!

ஆண் : நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க!

பெண் : தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க

குழு : வெஞ்சமரில் வெற்றி கண்டு
அஞ்சலிக்கும் மக்களுக்கோர்
விண்ணுயர் பெரிய கோயில் தந்த
வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க

குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே

ஆண் : மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான்
புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான்
மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான்
புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான்

ஆண் : தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான்
தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான்
என்றும் சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான்
சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான்
சோழன் வழிக் காட்டினான்……….

பெண் : ஆயக்கலைகள் பல நிலை நாட்டினான்
தமிழ் ஆளும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான்
கன்னி தமிழ் ஆளும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான்
தூயவர்தமர் வாழ்வில் துணைக் கூட்டினான்
சோழன் தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான்
தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான்
சோழன் பொன்னாக்கினான்………

ஆண் : அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான் ஆ….ஆ…ஆ..ஆ….ஆ…ஆ..ஆ….ஆ…ஆ..ஆ….ஆ…ஆ……
அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான்
மறம் காக்க படைச்சாலை உருவாக்கினான்
உயர் கல்விக் கூடங்கள் உருவாக்கினான்
பக்தி வளர்ந்திட ஆலயம் உருவாக்கினான்
சோழன் உருவாக்கினான்………

குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே

குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here