Singer : M.S. Rajeswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Unnai vellalaam
Thannai vendravan yavanum unnai vellalam
Mannanayinum kavithai mannanayinum
Avan maadu meikum siruvanidam panivathundu
Thannai vendravan yavanum unnai vellalam

Female : Ezhuthu enbathu unaku evan koduthathu
Arivu enbathu unaku yaar koduthathu
Ezhuthu enbathu unaku evan koduthathu
Arivu enbathu unaku yaar koduthathu
Kalviyale valarnthu varum nyanamum undu
Esan karunaiyale piranthu varum kavithaiyum undu
Thannai vendravan yavanum unnai vellalam

Female : Sollenum udalukul porulennum uyirai
Thogupathu kaviyagum
Porul illaiyendral
Verum soll mattum irunthal
Porul illaiyendral
Verum soll mattum irunthal
Iranthavan udalagum
Iranthavan udalagum

Female : Kaikanda sirpi kallilum kooda
Kadavulai seigindran
Antha kalaiyarinthavan kadavulai kooda
Kallai Ninaigindran
Kallena kidapathu sollagum
Athil kadavulai vadipathu porulagum
Sollum porulum inainthu vanthalthan
Suvaiulla kavithai uruvagum
Suvaiulla kavithai uruvagum

Female : Sollenum udalukul porulennum uyirai
Thogupathu kaviyagum
Porul illaiyendral
Verum soll mattum irunthal
Iranthavan udalagum
Iranthavan udalagum

Female : Boomiyai padaithavan iraivan
Athil veliyai pottavan manithan
Boomiyai padaithavan iraivan
Athil veliyai pottavan manithan
Valathai padaithavan iraivan
Athai kuvithu kondan oru manithan
Idhu aathikakaarargal vazhiya
Idhil aandavan meethinil pazhiya
Idhu aathikakaarargal vazhiya
Idhil aandavan meethinil pazhiya
Boomiyai padaithavan iraivan

Female : Saathikum manithan poruppu
Yetra thazhvuku manithan poruppu
Saathikum manithan poruppu
Yetra thazhvuku manithan poruppu
Idhil kadavulin pangu karupu
Indru kanalpol eriyuthu neruppu
Antha nerupin niramthan sivappu
Idhai kettathum unaken thigaipu

Female : Ariyudaiya manithargalum
Aganthai ennum thereri
Aathikam seiyum neram
Anbudaiya nangaiyarum
Agamudaiya naayaganai
Adimai pol ennum neram
Karaiyudaiya nenjinarum
Thiranudaiya kavingaergalai
Kaalal udhaikum neram
Kadal perugi mazhai perugi
Kaatru puyalaga varum
Kaliyugam mudiyum neram

Female : Tharuma neri poithathena
Thaayarkulam vaaduvathu
Thaalathu pongum neram
Thadiyudaiya moodargalum
Padaiyudaiya thalaivargalum
Thalai thooki nirkum neram
Tharumavinai poiyaagi
Kaalaneri thavaragi
Karunai paripogum neram
Kannanavan sonnapadi
Kannethiril vanthuvidum
Kaliyugam mudiyum neram
Kaliyugam mudiyum neram

பாடகி : எம்.எஸ்.ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : உன்னை வெல்லலாம்
தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்
மன்னனாயினும் கவிதை மன்னனாயினும்
அவன் மாடு மேய்க்கும் சிறுவனிடம் பணிவதுண்டு
தன்னை வென்றவன் உன்னை வெல்லலாம்

பெண் : எழுத்து என்பது உனக்கு எவன் கொடுத்தது
அறிவு என்பது உனக்கு யார் கொடுத்தது
எழுத்து என்பது உனக்கு எவன் கொடுத்தது
அறிவு என்பது உனக்கு யார் கொடுத்தது
கல்வியாலே வளர்ந்து வரும் ஞானமும் உண்டு ஈசன்
கருணையாலே பிறந்து வரும் கவிதையும் உண்டு
தன்னை வென்றவன் உன்னை வெல்லலாம்

பெண் : சொல்லெனும் உடலுக்குள்
பொருளென்னும் உயிரை
தொகுப்பது கவியாகும்
பொருள் இல்லையென்றால்
வெறும் சொல் மட்டும் இருந்தால்
பொருள் இல்லையென்றால்
வெறும் சொல் மட்டும் இருந்தால்
இறந்தவன் உடலாகும்
இறந்தவன் உடலாகும்

பெண் : கைக்கண்ட சிற்பி கல்லிலும் கூட
கடவுளைச் செய்கிறான் அந்த கலையறியாதவன்
கடவுளைக் கூட
கல்லாய் நினைக்கின்றான்
கல்லெனக் கிடப்பது சொல்லாகும்
அதில் கடவுளை வடிப்பது பொருளாகும்
சொல்லும் பொருளும் இணைந்து வந்தால்தான்
சுவையுள்ள கவிதை உருவாகும் ….
சுவையுள்ள கவிதை உருவாகும் ….

பெண் : சொல்லெனும் உடலுக்குள்
பொருளென்னும் உயிரை
தொகுப்பது கவியாகும்
பொருள் இல்லையென்றால்
வெறும் சொல் மட்டும் இருந்தால்
பொருள் இல்லையென்றால்
வெறும் சொல் மட்டும் இருந்தால்
இறந்தவன் உடலாகும்
இறந்தவன் உடலாகும்

பெண் : பூமியைப் படைத்தவன் இறைவன்
அதில் வேலியைப் போட்டவன் மனிதன்
பூமியைப் படைத்தவன் இறைவன்
அதில் வேலியைப் போட்டவன் மனிதன்
வளத்தைப் படைத்தவன் இறைவன்
அதை குவித்துக் கொண்டான் ஒரு மனிதன்
இது ஆதிக்ககாரர்கள் வழியா
இதில் ஆண்டவன் மீதினில் பழியா…..
இது ஆதிக்ககாரர்கள் வழியா
இதில் ஆண்டவன் மீதினில் பழியா…
பூமியைப் படைத்தவன் இறைவன்

பெண் : சாதிக்கும் மனிதன் பொறுப்பு
ஏற்ற தாழ்வுக்கும் மனிதன் பொறுப்பு
சாதிக்கும் மனிதன் பொறுப்பு
ஏற்ற தாழ்வுக்கும் மனிதன் பொறுப்பு
இதில் கடவுளின் பங்கு கருப்பு
இன்று கனல்போல் எரியுது நெருப்பு
அந்த நெருப்பின் நிறந்தான் சிவப்பு
இதைக் கேட்டதும் உனக்கேன் திகைப்பு

பெண் : அறிவுடைய மனிதர்களும் அகந்தை என்னும்
தேரேறி ஆதிக்கம் செய்யும் நேரம்
அன்புடைய நங்கையரும் அகமுடைய நாயகனை
அடிமை போல் என்னும் நேரம்

பெண் : கறையுடைய நெஞ்சினரும் திறனுடைய
கவிஞர்களை காலால் உதிக்கும் நேரம்
கடல் பெருகி மழை பெருகி
காற்று புயலாக வரும் கலியுகம் முடியும் நேரம்

பெண் : தரும நெறி பொய்த்ததென தாயர்குலம்
வாடுவது தாளாது பொங்கும் நேரம்
தடியுடைய முரடர்களும் படையுடைய
தலைவர்களும் தலை தூக்கி நிற்கும் நேரம்

பெண் : தருமவினை பொய்யாகி காலநெறி தவறாகி
கருணை பறிபோகும் நேரம்
கண்ணனவன் சொன்னபடி
கண்ணெதிரில் வந்து விடும்
கலியுகம் முடியும் நேரம்……
கலியுகம் முடியும் நேரம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here