Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Thannanth thanimaiyilae
Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku…

Female : Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku….

Female : Manjalukku palamirunthaal
Enthan mangalaththil arulirunthaal
Manjalukku palamirunthaal
Enthan mangalaththil arulirunthaal

Female : Kungumaththil gunamirunthaal
Ondrum kuraiyaamal vaazha vaikkum

Female : Paththu murai piranthaalum
Ungal pakkathunai naan varuvaen
Petha pillai maranthaalum
Naan pillai pol valarnthiruppen
Naan pillai pol valarnthiruppen

Female : Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku….

Female : Naan vanangum deivamellaam
Ungal nalla gunam ariyaatho
Kovilukku koduththathellaam
Nanmai kondu vara maattaatho

Female : Moochchirukkum kaalam varai
Ungal mugam paarththu naaniruppaen
Kaattru nindru pogumendraal
Ungal kaaladiyil uyir koduppaen

Female : Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தன்னந் தனிமையிலே
தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு……………..

பெண் : தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு……………..

பெண் : மஞ்சளுக்குப் பலமிருந்தால்
எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால்
மஞ்சளுக்குப் பலமிருந்தால்
எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால்

பெண் : குங்குமத்தில் குணமிருந்தால்
ஒன்றும் குறையாமல் வாழ வைக்கும்

பெண் : பத்து முறை பிறந்தாலும்
உங்கள் பக்கத்துணை நான் வருவேன்
பெத்த பிள்ளை மறந்தாலும்
நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன்
நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன்

பெண் : தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு……………..

பெண் : நான் வணங்கும் தெய்வமெல்லாம்
உங்கள் நல்ல குணம் அறியாதோ
கோவிலுக்குக் கொடுத்ததெல்லாம்
நன்மை கொண்டு வர மாட்டாதோ…..

பெண் : மூச்சிருக்கும் காலம் வரை
உங்கள் முகம் பார்த்து நானிருப்பேன்
காற்று நின்று போகுமென்றால்
உங்கள் காலடியில் உயிர் கொடுப்பேன்….

பெண் : தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு……………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here