Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Thappu thaalangal
Vazhi thavariya paadhangal
Ivar ipadi vaazhvadhena
Avan yezhudhiya vedhangal
Avanadhu laabangal
Avan aakiya paavangal
Aasaiyil raagangal
Aanaal abasura geethangal

Male : Thappu thaalangal
Vazhi thavariya paadhangal
Ivar ipadi vaazhvadhena
Avan yezhudhiya vedhangal

Male : Neraaga vaazhgindra mogam
Nerathil maraikindra megam
Madhiyodu nadakindra dhagam
Vidhiyodu selgindra vegam
Paaraalum veshangal
Paradesi kolangal
Vidhi vazhi dhinam odum odangal

Male : Thappu thaalangal
Vazhi thavariya paadhangal
Ivar ipadi vaazhvadhena
Avan yezhudhiya vedhangal

Male : Ninaivengum mangalyam thaaimai
Nidham thorum vilayattu bommai
Poruladharam seidha vindhai
Ival porul dharam aagivita sandhai
Aval maanam parungal
Avamaana kolangal
Vidhi vazhi dhinam odum odangal

Male : Thappu thaalangal
Vazhi thavariya paadhangal
Ivar ipadi vaazhvadhena
Avan yezhudhiya vedhangal

Male : Samudhaaya sandhaikku ponaal
Ivan pola pala perai kaanbom
Pidipatta pinthaanae kalvan
Adhu matum avan perum thalaivan
Idhu pondra paavangal
Samudhaaya paadangal
Vidhi vazhi dhinam odum odangal

Male : Thappu thaalangal
Vazhi thavariya paadhangal
Ivar ipadi vaazhvadhena
Avan yezhudhiya vedhangal

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
ஆசையில் ராகங்கள்
ஆனால் அபசுர கீதங்கள்

ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்

ஆண் : நேராக வாழ்கின்ற மோகம்
நேரத்தில் மறைக்கின்ற மேகம்
மதியோடு நடக்கின்ற தாகம்
விதியோடு செல்கின்ற வேகம்
பாராளும் வேஷங்கள்
பரதேசி கோலங்கள்
விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்

ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்

ஆண் : நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை
நிதம் தோறும் விளையாட்டு பொம்மை
பொருளாதாரம் செய்த விந்தை
இவள் பொருள் தாரம் ஆகிவிட்ட சந்தை
அவள் மானம் பாருங்கள்
அவமான கோலங்கள்
விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்

ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்

ஆண் : சமுதாய சந்தைக்கு போனால்
இவன் போல பல பேரை காண்போம்
பிடிபட்ட பின்தானே கள்வன்
அது மட்டும் அவன் பேரும் தலைவன்
இது போன்ற பாவங்கள்
சமுதய பாடங்கள்
விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்

ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here