Singers : T. R. Mahalingam and S. C. Krishnan
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Thathuva kalaiyudan vidhagar paniyattrum
Sangam valartha thamizhae
Thanmaana thamizhagam sanmaanam pettrida
Thani pugazh konda thamizhae
Male : Mathaga thimir migum anniyan unaiyae
Madhiyaadhu edhir kaalamoo
Malaiyodu thalai modhum
Mamadhaiyin uruvathai
Marainthoda seivaai thamizhae…ae….
Male : Tharindhina tharindhina thirandhinna
Tharindhina tharindhina thirandhinna
Male : Iyal isai naadaga kalaiyaalae
Igam meedhil seiyum thiyaagam
Idhanaal yaavarum adaivaar mogam
Inaindhidum thamizh suvai paaraai
Male : Thannaalae thaan ketta thanthana kalainganae
Thalaiyai kanakidaathae
Kannaana ilakkiya kaadhaliyai kaanadha
Kasadanae kalangidadhae
Male : Annaalilae silar aaga endraarena
Agandhaiyaal alaindhidadhae
Innaalilae engal iyal isai kalaiyai
Nee elithaaga ennidaathae
பாடகர்கள் : டி . ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். சி . கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
ஆண் : தத்துவக் கலையுடன் வித்தகர் பணியாற்றும்
சங்கம் வளர்த்த தமிழே
தன்மானத் தமிழகம் சன்மானம் பெற்றிட
தனிப் புகழ் கொண்ட தமிழே
ஆண் : மத்தகத் திமிர்மிகும் அந்நியன் உன்னையே
மதியாது எதிர் காலமோ
மலையோடு தலை மோதும்
மமதையின் உருவத்தை
மறைந்தோட செய்வாய் தமிழே……..
ஆண் : தரிந்தின தரிந்தின திரந்தின்னா
தரிந்தின தரிந்தின திரந்தின்னா
ஆண் : இயல் இசை நாடகக் கலையாலே
இகம் மீதில் செய்யும் தியாகம்
இதனால் யாவரும் அடைவார் மோகம்
இணைந்திடும் தமிழ்ச் சுவை பாராய்
ஆண் : தன்னாலே தான்கெட்ட தந்தனாக் கலைஞனே
தலையை கனத்திடாதே
கண்ணான இலக்கிய காதலியைக் காணாத
கசடனே கலங்கிடாதே
ஆண் : அந்நாளிலே சிலர் ஆகா என்றார் என
அசந்தையால் அலைந்திடாதே
இந்நாளில் எங்கள் இயலிசைக் கலையை
நீ எளிதாக எண்ணிடாதே…….