Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Vidya Sagar

Female : Thavamindri kidaitha varamae
Ini vaazhvil ellaam sugamae
Thavamindri kidaitha varamae …aeae
Ini vaazhvil ellaam sugamae

Male : Nee sooriyan naan vennila
Un oliyal thaanae vaazhgiren

Female : Nee sooriyan naan thamarai
Nee vandhaal thaanae malargiren

Male : Nee sooriyan naan vaan mughil
Nee nadandhidum paadhaiyaagiren

Female : Nee sooriyan naan aazh kadal
En madiyil unnai yendhinen

Male : Thavamindri kidaitha varamae … hoooo ooo

Female : Ini vaazhvil ellaam sugamae

Male : Hooo … kadivaalam illaadha kaatraga naan maara
Vendaamaa … vendaamaa

Female : Gadigaaram illaadha oor paarthu kudiyera
Vendaamaa … vendaamaa

Male : Kai korkkum podhellaam
Kai reghai theyattum
Muthathin ennikkai
Mudivindri poghattum

Female : Pagalellaam iravaagi ponaal enna
Iravellaam vidiyaamal neendaal enna

Male : Nam uyir rendum udal ondril
Vaazhndhaal enna…aaa

Female : Thavamindri kidaitha varamae
Ini vaazhvil ellaam sugamae

Male : Soodana idam vendum sugamaagavum vendum
Tharuvaaya … tharuvaaya

Female : Kan endra porvaikkul kanavendra methaikkul
Varuvaayaa … varuvaayaa

Male : Vizhundhaalum un kannil
Kanavaagha naan vizhuven
Yezhundhaalum un nenjil
Ninaivaagha naan yezhuven

Female : Madindhaalum un moochin soottaal madiven
Pirandhaalum unaiyae thaan meendum serven

Male : Ini un moochai kadan vaangi
Naan vaazhuven

Female : Thavamindri kidaitha varamae
Ini vaazhvil ellaam sugamae

Male : Nee sooriyan naan vennila
Un oliyaal thaanae vaazhgiren

Female : Nee sooriyan naan thamarai
Nee vandhaal thaanae malargiren

Male : Nee sooriyan naan vaan mughil
Nee nadandhidum paadhaiyaagiren

Female : Nee sooriyan naan aazh kadal
En madiyil unnai yendhinen

Male : Thavamindri kidaitha varamae …. hoooo ooo

Female : Ini vaazhvil ellaam sugamae…

பாடகி : சாதனா சர்கம்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

பெண் : நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

பெண் : நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்

ஆண் : தவமின்றி
கிடைத்த வரமே ஹோ ஓ …
பெண் : இனி வாழ்வில்
எல்லாம் சுகமே

ஆண் : ஹோ கடிவாளம்
இல்லாத காற்றாக நான்
மாற வேண்டாமா வேண்டாமா

பெண் : கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா

ஆண் : கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை முடிவின்றி
போகட்டும்

பெண் : பகலெல்லாம்
இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன

ஆண் : நம் உயிர்
ரெண்டும் உடல்
ஒன்றில் வாழ்ந்தால்
என்ன

பெண் : தவமின்றி
கிடைத்த வரமே
இனி வாழ்வில்
எல்லாம் சுகமே

ஆண் : சூடான இடம்
வேண்டும் சுகமாகவும்
வேண்டும் தருவாயா
தருவாயா

பெண் : கண் என்ற
போர்வைக்குள் கனவென்ற
மெத்தைக்குள் வருவாயா
வருவாயா

ஆண் : விழுந்தாழும் உன்
கண்ணில் கனவாக நான்
விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக
நான் எழுவேன்

பெண் : மடிந்தாலும்
உன் மூச்சின் சூட்டால்
மடிவேன் பிறந்தாலும்
உனையே தான் மீண்டும்
சேர்வேன்

ஆண் : இனி உன்
மூச்சை கடன் வாங்கி
நான் வாழுவேன்

பெண் : தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே

ஆண் : நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

பெண் : நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

பெண் : நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்

ஆண் : தவமின்றி
கிடைத்த வரமே ஹோ ஓ …
பெண் : இனி வாழ்வில்
எல்லாம் சுகமே

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here