Singers : Karthik, Sunitha Menon and Rekha

Music by : Bharadwaj

Lyrics by : Vairamuthu

Female : Thayavu seithu ennai kalavaadu
Thadayam illaamal kalavaadu
Vizhiyaal vizhiyai thirudi vidu
Viralaal kannam kalavaadu

Female : Idhazhaal idhalai kollai adi
Idhaya pudhaiyal thondi edu
Pooththu nirkkum pookkalai ellaam
Killi killi nee kollai adi
Kaaththu vaiththa karpai mattum
Solli vittu nee kollaiyadi
Raari raari raari raa raari raari raari raa

Female : Unnai pol oru aan maganai
En vaazhkkai veedhiyil kaanavillai

Male : Yaei koovam nadhiyilae vennilavaa
Naanae ennai nampavillai
Female : Entha mazhai thuli engu vizhum
Megamum boomiyum arivathillai

Male : Oh oo….Mannai thodaatha mazhaithuli naan
Un madiyil vizhunthaen vazhivathillai

Female : Unnai thavira innoruvan
Vaazhvil enakku vaaippillai
En uyirum udalum semikka
Unnai thavira soththu illai
Male : Raari raari raatri raa raari raari raatri raa

Female : Aasaikkaadu erikirathae
Anaiththida sonnaal yaedhu seivaai
Male : Mm….udhiram kanneer viyarvai ellaam
Oottri oottri naan anaippaen

Female : Ennai parunthu koththa vanthaal
Idhaya naayaga yaedhu seivaai
Male : Parunthukku en sathai virunthaakki
Pachai kuyilai meettu eduppaen

Female : Ulaga kaadhalai ondru seithu
Naan oruvan mattumae kadalippaen
Un uyirukethum yaedhum naermaiyil
Naan unakku mun pullaai mulaiththiruppaen

பாடகர்கள் : கார்த்திக், சுனித மேனன் மற்றும் ரேகா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : தயவு செய்து என்னை களவாடு
தடயம் இல்லாமல் களவாடு
விழியால் விழியை திருடி விடு
விரலால் கன்னம் களவாடு

பெண் : இதழால் இதழை கொள்ளை அடி
இதய புதையல் தோண்டி எடு
பூத்து நிற்கும் பூக்களை எல்லாம்
கிள்ளி கிள்ளி நீ கொள்ளை அடி
காத்து வைத்த கற்பை மட்டும்
சொல்லி விட்டு நீ கொள்ளையடி
ராரி ராரி ராரி ரா ராரி ராரி ராரி ரா

பெண் : உன்னை போல் ஒரு ஆண் மகனை
என் வாழ்க்கை வீதியில் காணவில்லை

ஆண் : ஏய் கூவம் நதியிலே வெண்ணிலவா
நானே என்னை நம்பவில்லை
பெண் : எந்த மழை துளி எங்கு விழும்
மேகமும் பூமியும் அறிவதில்லை

ஆண் : ஓஹ் ஓ……மண்ணை தொடாத மழைத்துளி நான்
உன் மடியில் விழுந்தேன் வழிவதில்லை

பெண் : உன்னை தவிர இன்னொருவன்
வாழ்வில் எனக்கு வாய்ப்பில்லை
என் உயிரும் உடலும் சேமிக்க
உன்னை தவிர சொத்து இல்லை
ஆண் : ராரி ராரி ராற்ரி ரா ராரி ராரி ராற்ரி ரா

பெண் : ஆசைக்காடு எரிகிறதே
அணைத்திட சொன்னால் ஏது செய்வாய்
ஆண் : ம்ம்…..உதிரம் கண்ணீர் வியர்வை எல்லாம்
ஊற்றி ஊற்றி நான் அணைப்பேன்

பெண் : என்னை பருந்து கொத்த வந்தால்
இதய நாயாக ஏது செய்வாய்
ஆண் : பருந்துக்கு என் சதை விருந்தாக்கி
பச்சை குயிலை மீட்டு எடுப்பேன்

பெண் : உலக காதலை ஒன்று செய்து
நான் ஒருவன் மட்டுமே காதலிப்பேன்
உன் உயிருகேதும் ஏதும் நேர்மையில்
நான் உனக்கு முன் புல்லாய் முளைத்திருபேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here