Singers : G.V. Prakash Kumar & Saindhavi
Music by : Premgi Amaran
Male : Thean puthu thean
Idhu dhevaloga bodhai yetrum
Thean madhu thean kalithaenae
Female : Thean kalanthen
Ini melum melum ootti paarka
Thaan ninaithen azhaithenae
Male : Undhan idhazh
Thaen ilaadhu
Endhan idhazh
Thaen tharaadhu
Kanden suvai konden
Idhu en thaen
Female : Sondham ena
Nee ilaadhu
Endhan idhazh
Thaen tharaadhu
Kanna mani vanna
Ena vanthen
Male : Endhan thamizh senthaenae
Undhan thunai vanthenae
Unnai ninaithen
Ennai maranthen
Vandhu anaithanae
Female : Sonna padi seithenae
Ennai ingu thanthenae
Thanjamadainthen
Konjakkidaithen
Engum paranthenae…hey
Male : Eh…hey…
Kannil pala kavi padithen
Kandu amudhathai kudithen
Kanni paruvathu
Vanna kumudhathai azhaithen
Female : Ho…oh…
Kannan ezhil kandu malaithen
Kaigal thodamal silirthen
Enna chirai vittu
Vanna kannavinil nuzhainthen
Male : Katti podaadhadhen
Moodaadhadhen
Thottu padaadhadhen aanadhen
Female : Kettu pogaadhadhen
Nee ketta thaen
Mitcham vaikkaadhadhen povathen
Male : Nenjikullil adai kaathen
Endhanukkul unai parthen
Konji kalithen angum alithen
Engum nirainthanae
Female : Kaigalukkul adangkathen
Kaadhalukkul urankathen
Kanni kavithen
Kaiyil malaithen
Pinni eduthenae hey…
Female : Ha…haa…
Kana thavam thannai
Thodarnthen
Kaiyil kidaithathum
Padarnthen
Vaana velithanil
Vasam purinthida unarnthen
Male : Ha…haa…
Aanavarai solla thuninthen
Aayul varai inbam arinthen
Thaenamudhai tharum
Dheiva nilai kandu pugunthen
Female : Inbam aaranathen
Thaeranathen
Sondham peranathen paainthathen
Male : Kangal modaadhadhen
Thedaadhadhen
Kanavai kankindra thaen
Saindhadhen…
Female : Karpanaiyil kidanthenae
Kanda pinbu magizhnthenae
Patri padarnthen
Sutri kidanthen
Vetri adainthenae
Male : Anandhathil mithanthenae
Acachariyam adainthenae
Mona nilaiyil
Gnyaanam adainthen
Motcham pugunthenae hey…
பாடகர்கள் : சைந்தவி மற்றும்
ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் :
பிரேம்ஜி அமரன்
ஆண் : தேன் புது தேன்
இது தேவலோக போதை ஏற்றும்
தேன் மது தேன் களித்தேனே
பெண் : தேன் கலந்தேன்
இனி மேலும் மேலும் ஊட்டி பார்க்க
தான் நினைத்தேன் அழைத்தேனே
ஆண் : உந்தன் இதழ்
தேன் இல்லாது
எந்தன் இதழ்
தேன் தராது
கண்டேன் சுவை கொண்டேன்
இது என் தேன்
பெண் : சொந்தம் என
நீ இல்லாது
எந்தன் இதழ்
தேன் தராது
கண்ணா மணிவண்ணா
என வந்தேன்
ஆண் : எந்தன் தமிழ் செந்தேனே
உந்தன் துணை வந்தேனே
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்
வந்து அனைத்தேனே
பெண் : சொன்ன படி செய்தேனே
என்னை இங்கு தந்தேனே
தஞ்சமடைந்தேன்
கொஞ்சக்கிடைத்தேன்
எங்கும் பறந்தேனே…ஹே…
ஆண் : யே ஹே…
கண்ணில் பல கவி படித்தேன்
கண்டு அமுதத்தை குடித்தேன்
கன்னி பருவத்து
வண்ண குமுதத்தை அழைத்தேன்
பெண் : ஹோ ஹோ
கண்ணன் எழில் கண்டு
மலைத்தேன்
கைகள் தொடாமல் சிலிர்த்தேன்
என்ன சிறை விட்டு
வண்ண கன்னவினில்
நுழைந்தேன்
ஆண் : கட்டி போடாததேன்
மூடாததேன்
தொட்டு படாததேன் ஆனதேன்
பெண் : கெட்டு போகாததேன்
நீ கேட்ட தேன்
மிச்சம் வைக்காததேன் போவதேன்
ஆண் : நெஞ்சிக்குள்ளில்
அடைகாத்தேன்
எந்தனுக்குள் உனை பார்த்தேன்
கொஞ்சி களித்தேன் அங்கும்
அளித்தேன்
எங்கும் நிறைந்தேனே
பெண் : கைகளுக்குள் அடங்காதேன்
காதலுக்குள் உறங்காதேன்
கன்னி கவித்தேன்
கையில் மலைத்தேன்
பின்னி எடுத்தேனே ஹே…
பெண் : ஹா…ஹா…
காண தவம் தன்னை
தொடர்ந்தேன்
கையில் கிடைத்ததும்
படர்ந்தேன்
வான வெளிதனில்
வசம் புரிந்திட உணர்ந்தேன்
ஆண் : ஹா…ஹா…
ஆனவரை சொல்ல துணிந்தேன்
ஆயுள் வரை இன்பம் அறிந்தேன்
தேனமுதை தரும்
தெய்வ நிலை கண்டு புகுந்தேன்
பெண் : இன்பம் ஆறானதேன்
தேரானதேன்
சொந்தம் பேரானதேன் பாய்ந்ததேன்
ஆண் : கண்கள் மூடாததேன்
தேடாததேன்
கனவை காண்கின்றதேன்
சாய்ந்ததேன்…
பெண் : கற்பனையில் கிடந்தேனே
கண்ட பின்பு மகிழ்ந்தேனே
பற்றி படர்ந்தேன்
சுற்றி கிடந்தேன்
வெற்றி அடைந்தேனே
ஆண் : ஆனந்தத்தில் மிதந்தேனே
ஆச்சர்யம் அடைந்தேனே
மோன நிலையில்
ஞானம் அடைந்தேன்
மோட்சம் புகுந்தேனே ஹே…