Singer : Thiruvudaiyan

Music by : Bharadwaj

Lyrics by : Vairamuthu

Male : Thedi thedi paakkuraen
Avan odi odi oliyuraan
Thedi thedi paakkuraen
Avan odi odi oliyuraan

Male : Ottaipaanai odambukkulla
Usuraiyum ooththi vachchavanae

Male : Thedi thedi paakkuraen
Avan odi odi oliyuraan

Male : Vantha vazhi sollaama
Pora vazhi illaama
Kanna katti aanum ponna
Kaattu vazhi vittavanae

Male : Thedi thedi paakkuraen
Avan odi odi oliyuraan

Male : Oruththanukku oruththunaa
Adhuvum ingae kaaviyam
Anju perukku oruththinaa
Adhuvum ingae kaaviyam

Male : Karpu needhi idhiyaathu
Kaalam seiyum kaariyam
Kaalam pogum pokka paaththu
Maaruthaiyaa jeevitham

Male : Kaalam potta road-tu vazhi
Manushan koottam pogala
Manushan potta road-tu vazhi
Kaalam vanthu serala

Male : Kaalaththoda manushanaiyum
Manusanoda kaalaththaiyum
Mutta vittu mutta vittu
Etti ninni sirippavana

Male : Thedi thedi paakkuraen
Avan odi odi oliyuraan

Male : Innaarukku innaaruyinnu
Ezhuthi onnum vaikkala
Ezhuthi vachu paaththaalum
Ellaamae nikkala

Male : Saththiyaththil vaazhnthavanum
Sattapadi thokkuraan
Sattam meeri poravanum
Saththiyaththai jeyikkiraan

Male : Savak kuzhikku pona silar
Seththa pinnum irakkuraan
Saalaiyilae pogum palar
Vaazhnthu kondae marikkiraan

Male : Aalukkoru vidukathaiyai
Pottu vittu ponavana
Naalukkoru vidaiya mattum
Maaththi maaththi sonnavana

Male : Thedi thedi paakkuraen
Avan odi odi oliyuraan
Avan odi odi oliyuraan

பாடகர் : திருவுடையான்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : தேடி தேடி பாக்குறேன்
அவன் ஓடி ஓடி ஒளியுறான்
தேடி தேடி பாக்குறேன்
அவன் ஓடி ஓடி ஒளியுறான்

ஆண் : ஒட்டைபானை ஒடம்புக்குள்ள
உசுரையும் ஊத்தி வச்சவனே

ஆண் : தேடி தேடி பாக்குறேன்
அவன் ஓடி ஓடி ஒளியுறான்

ஆண் : வந்த வழி சொல்லாம
போற வழி இல்லாம
கண்ண கட்டி ஆணும் பொண்ண
காட்டு வழி விட்டவனே

ஆண் : தேடி தேடி பாக்குறேன்
அவன் ஓடி ஓடி ஒளியுறான்

ஆண் : ஒருத்தனுக்கு ஒருத்தினா
அதுவும் இங்கே காவியம்
அஞ்சு பேருக்கு ஒருத்தினா
அதுவும் இங்கே காவியம்

ஆண் : கற்பு நீதி இதியாதி
காலம் செய்யும் காரியம்
காலம் போகும் போக்க பாத்து
மாறுதையா ஜீவிதம்

ஆண் : காலம் போட்ட ரோட்டு வழி
மனுஷன் கூட்டம் போகல
மனுஷன் போட்ட ரோட்டு வழி
காலம் வந்து சேரல

ஆண் : காலத்தோட மனுஷனையும்
மனுசனோட காலத்தையும்
முட்ட விட்டு முட்ட விட்டு
எட்டி நின்னு சிரிப்பவன

ஆண் : தேடி தேடி பாக்குறேன்
அவன் ஓடி ஓடி ஒளியுறான்

ஆண் : இன்னாருக்கு இன்னாருயின்னு
எழுதி ஒன்னும் வைக்கல
எழுதி வச்சு பாத்தாலும்
எல்லாமே நிக்கல

ஆண் : சத்தியத்தில் வாழ்ந்தவனும்
சட்டப்படி தோக்குறான்
சட்டம் மீறி போறவனும்
சத்தியத்தை ஜெயிக்கிறான்

ஆண் : சவக் குழிக்கு போன சிலர்
செத்த பின்னும் இறக்குறான்
சாலையிலே போகும் பலர்
வாழ்ந்து கொண்டே மறிக்கிறான்

ஆண் : ஆளுக்கொரு விடுகதையை
போட்டு விட்டு போனவன
நாளுக்கொரு விடைய மட்டும்
மாத்தி மாத்தி சொன்னவன

ஆண் : தேடி தேடி பாக்குறேன்
அவன் ஓடி ஓடி ஒளியுறான்
அவன் ஓடி ஓடி ஒளியுறான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here