Singer : Ambili

Music by : G. Devarajan

Female : Thaedugindra kangalukkul
Odi varum swaami
Thiruvilakkin oliyinilae
Kudiyirukkum swaami

Female : Vaadugindra ezhaigalin
Varumai theerkum swaami
Vanjamillaa nallavarkku
Arul puriyum swaami
Aiyappa swaami arul puri swaami

Female : {Kannanum nee ganapathi nee
Kandhanum neeyae
Engal kaaval dheivam paramasivan
Vishnuvum neeyae} (2)

Female : Andamellaam kaattharulum
Sakthiyum neeyae
En mael anbu vaithu
Nadhi varaikkum odi vanthaayae
Aiyappa swaami innum arul puri swaami

Female : Thaedugindra kangalukkul
Odi varum swaami
Thiruvilakkin oliyinilae
Kudiyirukkum swaami
Aiyappa swaami arul puri swaami

Female : {Thandhai undu annai undu
Endhan manaiyilae
Oru thambi mattum pirakka vendum
Undhan vadivilae} (2)

Female : Anbu kondu thandhaikkavan
Seiyum paniyilae
Naangal aandu dhorum
Vandhu nirpom undhan nizhalilae
Aiyappa swaami innum arul puri swaami

Female : Thaedugindra kangalukkul
Odi varum swaami
Thiruvilakkin oliyinilae
Kudiyirukkum swaami

Female : Vaadugindra ezhaigalin
Varumai theerkum swaami
Vanjamillaa nallavarkku
Arul puriyum swaami
Aiyappa swaami arul puri swaami

Female : Aiyappa swaami arul puri swaami

பாடகி : அம்பிளி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பெண் : தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி

பெண் : வாடுகின்ற ஏழைகளின்
வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு
அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண் : {கண்ணனும் நீ கணபதி நீ
கந்தனும் நீயே
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்
விஷ்ணுவும் நீயே} (2)

பெண் : அண்டமெல்லாம் காத்தருளும்
சக்தியும் நீயே
என்மேல் அன்பு வைத்து
நதி வரைக்கும் ஓடிவந்தாயே
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண் : தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண் : {தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே} (2)

பெண் : அன்பு கொண்டு தந்தைக்கவன்
செய்யும் பணியிலே
நாங்கள் ஆண்டு தோறும்
வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண் : தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி

பெண் : வாடுகின்ற ஏழைகளின்
வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு
அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண் : ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here