Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Ennangalil vaazhum penn chiththiram
Kannin vazhi pesum natchaththiram

Male : Chinna poonguyil sinthum mozhigalil
Ennai paaduvaal anthi nilavinil
Vittu pogumaa thotta ninaivugal
Penn ullam poraadumo

Male : Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai

Male : Thaalaattum velai aval neelaampari
Neeraattum neram aval kodhavari
Thaalaattum velai aval neelaampari
Neeraattum neram aval kodhavari
Naanthaanae thedum en aasaikkili
Naalthorum padum oru geedhanjali

Male : Ulla kovilili velli radhamena
Enna Cholaiyil vanna malarena
Konjum kogilam konda uravugal
Nenjodu nindraadumo

Male : Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai

Male : ……………….

Male : Nee paarkkum paarvai ilamaan thanthathu
Nee pesum vaarththai malarnthaen thanthathu
Nee konda kadhal adi naan thanthathu
Naan konda yaekkam adhu nee thanthathu

Male : Thanga thaenkudam alli anaikkaiyil
Chinna poochcharam killi edukkaiyil
Anbu kaaviyam palli araiyinil
Verenna naan solvathu

Male : Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Ennangalil vaazhum penn chiththiram
Kannin vazhi pesum natchaththiram

Male : Chinna poonguyil sinthum mozhigalil
Ennai paaduvaal anthi nilavinil
Vittu pogumaa thotta ninaivugal
Penn ullam poraadumo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்

ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ….

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை

ஆண் : தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
நான்தானே தேடும் என் ஆசைக்கிளி
நாள்தோறும் பாடும் ஒரு கீதாஞ்சலி

ஆண் : உள்ளக் கோவிலில் வெள்ளி ரதமென
எண்ணச் சோலையில் வண்ண மலரென
கொஞ்சும் கோகிலம் கொண்ட உறவுகள்
நெஞ்சோடு நின்றாடுமோ…..

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை

ஆண் : ………………………..

ஆண் : நீ பார்க்கும் பார்வை இளமான் தந்தது
நீ பேசும் வார்த்தை மலர்த்தேன் தந்தது
நீ கொண்ட காதல் அடி நான் தந்தது
நான் கொண்ட ஏக்கம் அது நீ தந்தது

ஆண் : தங்கத் தேன்குடம் அள்ளி அணைக்கையில்
சின்னப் பூச்சரம் கிள்ளி எடுக்கையில்
அன்புக் காவியம் பள்ளி அறையினில்
வேறென்ன நான் சொல்வது….

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்

ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here