Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : A. R. Rahman

Female : Kandrum unnaadhu
Kalaththinum padaadhu
Nallaan theembaal
Nilaththu ukkaanghu
Enakkum aagaadhu
En aikkum udhavaadhu
Pasalai uneeiyar vendum
Thivvalai algul en maamai kavinae

Female : Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai

Female : Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Oru viral vandhu ennai theendiyadhae
En narambodu veenai meettiyadhae
Manam avandhaanaa
Ivan endru thidukkittadhae

Male : Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Oru viral vandhu unnai theendiyadho
Un narambodu veenai meettiyadho
Un uyirkkullae
Kaadhal ambai thoduththittadho…ooo

Chorus : Vaanil pirandha amudhandro
Paavai vilaindha mazhai andro
Mullai vagulam kurukkaththi
Thollaiyin idaintha udal andro
Theendai mei theendai

Female : Vizhiyodum theendal undu
Viralodum theendal undu
Irandodum bedham ulladhu

Male : Vizhiththeendal uyir killum
Viral theendal ullam killum
Adhudhaanae nee solvadhu

Female : Nadhi ora poovin melae
Jadhipaadum saaral polae
Ennil inba thunbham
Seiguvadhoo

Male : Oru kannam thandhen munnae
Maru kannam thandhaai pennae
Yesunaadhar kaatru vandhu
Veesiyadhoo

Female : Uravin uyirae uyirae
Ennai pennaai cheiga
Male : Azhagae azhagae
Un aasai velga… aa… aa

Female : Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Oru viral vandhu ennai theendiyadhae
En narambodu veenai meettiyadhae
Manam avandhaanaa
Ivan endru thidukkittadhae

Claps : ………………………………..

Male : Kadalodu muththam thandhum
Kalaiyaadha vaanam pola
Udalodu ottikkollavoo

Female : Udalodu angum ingum
Uraigindra jeevan pola
Unnodu kattikkollavoo

Male : Unai thaedi mannil vandhen
Enai thedi neeyum vandhaai
Unnai naanum ennai neeyum
Kandukondoam

Female : Pala pergal kaadhal seidhu
Pazhangaadhal theerumbodhu
Bhooi vaazha pudhiya kaadhal
Kondu vandhom

Male : Paniyo paniyin thuliyo
Un idhazhmel yenna
Female : Paniyo thaeno
Nee suvaiththaal yenna.. aa… aa..

Male : Theendaaii
Female : Theendaaii
Male : Mei theendaai
Female : Mei theendaai

Male : Thaandaai
Female : Thaandaai
Male : Padi thaandaai
Female : Padi thaandaai

Male : Oru viral vandhu unnai theendiyadho
Female : Oru viral vandhu ennai theendiyadhae
Male : Un narambodu veenai meettiyadho
Female : En narambodu veenai meettiyadhae
Male : Un uyirkkullae
Female : Manam avandhaanaa
Male : Kaadhal ambai thoduththittadho…ooo
Female : Ivan endru thidukkittadhae….

Female : Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Chorus : Vaanil pirandha amudhandro
Female : Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Chorus : Paavai vilaindha mazhai andro
Female : Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Padi thaandaai…padi thaandaai..
Padi thaandaai…padi thaandaai…

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : கன்றும்
உண்ணாது கலத்தினும்
படாது நல்லான் தீம்பால்
நிலத்து உக்காங்கு எனக்கும்
ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திவ்வலை அல்குல் என்
மாமைக் கவினே

பெண் : தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய்
படி தாண்டாய் தீண்டாய்
மெய் தீண்டாய் தாண்டாய்
படி தாண்டாய் தீண்டாய்
மெய் தீண்டாய் தாண்டாய்
படி தாண்டாய்

பெண் : தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் ஒரு விரல் வந்து
என்னைத் தீண்டியதே என்
நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன்
என்று திடுக்கிட்டதே

ஆண் : தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் ஒரு விரல்
வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை
மீட்டியதோ உன் உயிர்க்குள்ளே
காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

குழு : வானில் பிறந்த
அமுதன்றோ பாவை
விளைந்த மழை அன்றோ
முல்லை வகுலம் குருக்கத்தி
தொல்லையின் இடைந்த உடல்
அன்றோ தீண்டாய் மெய் தீண்டாய்

பெண் : விழியோடும்
தீண்டல் உண்டு
விரலோடும் தீண்டல்
உண்டு இரண்டோடும்
பேதம் உள்ளது

ஆண் : விழித்தீண்டல்
உயிர் கிள்ளும் விரல்
தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

பெண் : நதியோரப்
பூவின்மேலே ஜதி
பாடும் சாரல் போலே
என்னில் இன்ப துன்பம்
செய்குவதோ

ஆண் : ஒரு கன்னம்
தந்தேன் முன்னே மறு
கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுநாதர் காற்று வந்து
வீசியதோ

பெண் : உறவின்
உயிரே உயிரே
என்னைப் பெண்ணாய்ச்
செய்க
ஆண் : அழகே அழகே
உன் ஆசை வெல்க

பெண் : தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் ஒரு விரல் வந்து
என்னைத் தீண்டியதே என்
நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன்
என்று திடுக்கிட்டதே

ஆண் : கடலோடு முத்தம்
தந்தும் கலையாத வானம்
போல உடலோடு
ஒட்டிக்கொள்ளவோ

பெண் : உடலோடு
அங்கும் இங்கும்
உறைகின்ற ஜீவன்
போல உன்னோடு
கட்டிக்கொள்ளவோ

ஆண் : உனைத் தேடி
மண்ணில் வந்தேன்
எனைத்தேடி நீயும்
வந்தாய் உன்னை நானும்
என்னை நீயும் கண்டு
கொண்டோம்

பெண் : பல பேர்கள்
காதல் செய்து பழங்காதல்
தீரும்போது பூமி வாழப் புதிய
காதல் கொண்டுவந்தோம்

ஆண் : பனியோ
பனியின் துளியோ
உன் இதழ்மேல் என்ன
பெண் : பனியோ தேனோ
நீ சுவைத்தால் என்ன

ஆண் : தீண்டாய்
பெண் : தீண்டாய்
ஆண் : மெய் தீண்டாய்
பெண் : மெய் தீண்டாய்

ஆண் : தாண்டாய்
பெண் : தாண்டாய்
ஆண் : படி தாண்டாய்
பெண் : படி தாண்டாய்

ஆண் : ஒரு விரல்
வந்து உன்னைத்
தீண்டியதோ
பெண் : ஒரு விரல்
வந்து என்னைத்
தீண்டியதே
ஆண் : உன் நரம்போடு
வீணை மீட்டியதோ
பெண் : என் நரம்போடு
வீணை மீட்டியதே
ஆண் : உன் உயிர்க்குள்ளே
பெண் : மனம் அவன்தானா
ஆண் : காதல் அம்பைத்
தொடுத்திட்டதோ
பெண் : இவன்
என்று திடுக்கிட்டதே

பெண் : தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய்
குழு : வானில் பிறந்த
அமுதன்றோ
பெண் : தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய்
குழு : பாவை விளைந்த
மழை அன்றோ
பெண் : தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய் படி
தாண்டாய் படி தாண்டாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here