Singer : C. S. Jayaraman

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male : Theeyinaal sutta pun ullarum
Aaradhae naavinaal sutta vadu
Ennandri kondavarkkum uivundaam uivillai
Seinandri kondra magarkku
Deivam thozha al kolunan
Thozhuthezhuvaal peiyena peiyum mazhai

Male : Ethanai vazhigal ethanai gunangal
Ethanai vindhai manidharada
Ithanai vazhiyil orae vazhi kaanbom
Evano avanae arinjanada

Male : Ethanai vazhigal ethanai gunangal
Ethanai vindhai manidharada

Male : Kobathinaal oru vaarthai sonnaal
Adhilkudumbam kalaindhadhada
Indru thaabathilae uyir vaadugiraal
Idhu thalaividhi illaiyada

Male : Kangalai polae kaathu valarthavan
Karai pol pirinthu vittaan
Andha annanai thedi alaibavan inbam
Anaithum maranthu vittaan

Male : Ethanai vazhigal ethanai gunangal
Ethanai vindhai manidharada

Male : Illara vaazhvil nallara pengalai
Deivam endru yen sonnar
Avar sindhanai ondraai seigaiyum ondraai
Thigazhvadhanaal sonnaar

Male : Ethanai vazhigal ethanai gunangal
Ethanai vindhai manidharada
Ithanai vazhiyil orae vazhi kaanbom
Evano avanae arinjanada

Male : Vaanathirkku orae nilavu
Maanidarkkellam orae inam
Vanakathirkku uriyadhu orae deivam
Vaazhkaikku inbam orae vazhi

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தீயினால் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு…..
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு…
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்
எத்தனை விந்தை மனிதரடா
இத்தனை வழியில் ஒரே வழி காண்போன்
எவனோ அவனே அறிஞனடா

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்
எத்தனை விந்தை மனிதரடா

ஆண் : கோபத்தினால் ஒரு வார்த்தை சொன்னாள்
அதில் குடும்பம் கலைந்ததடா
இன்று தாபத்திலே உயிர் வாடுகிறாள்
இது தலைவிதி இல்லையடா…..

ஆண் : கண்களைப் போலே காத்து வளர்த்தவன்
கரை போல் பிரிந்து விட்டான்
அந்த அண்ணனைத் தேடி அலைபவன் இன்பம்
அனைத்தும் மறந்து விட்டான்…..

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்
எத்தனை விந்தை மனிதரடா

ஆண் : இல்லற வாழ்வில் நல்லறப் பெண்களை
தெய்வமென்று ஏன் சொன்னார்
அவர் சிந்தனை ஒன்றாய் செய்கையும் ஒன்றாய்
திகழ்வதனால் சொன்னார்

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்
எத்தனை விந்தை மனிதரடா
இத்தனை வழியில் ஒரே வழி காண்போன்
எவனோ அவனே அறிஞனடா

ஆண் : வானத்திற்கு ஒரே நிலவு
மானிடர்க்கெல்லாம் ஒரே இனம்
வணக்கத்திற்கு உரியது ஒரே தெய்வம்
வாழ்க்கைக்கு இன்பம் ஒரே வழி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here