Singer : Mano

Music by : K. V. Mahadevan

Male : Thendral oru pattu kattum
Vandu vandhu mettu kattum
Thendral oru pattu kattum
Vandu vandhu mettu kattum

Male : Odaiyellaam thaalam sollum
Adhai kettukittae kaalam sellum
Odaiyellaam thaalam sollum
Adhai kettukittae kaalam sellum

Male : Thendral oru pattu kattum
Vandu vandhu mettu kattum

Male : Pattu marathadhinnu paavi manam thudikirathu
Thoorathu kuyil vandhu solli kodukkirathu
Megam irangi vandhu raagam padikkirathu
Aalaana poovellam pera solli koopidudhu

Male : Sangeetham irukkaiyilae saapadu thevai illai
Sangeetham irukkaiyilae saapadu thevai illai
Thoonagaiyilum paattu varum
Naan onnum oomaiyillai

Male : Thendral oru pattu kattum
Vandu vandhu mettu kattum
Odaiyellaam thaalam sollum
Adhai kettukittae kaalam sellum

Male : Thendral oru pattu kattum
Vandu vandhu mettu kattum

Male : Yerikaraiyil ellam empaattu ketkuthamma
Naan pogum paadhaiyellam maan kootam varuguthamma
Yedho oru kanavu en nenjil irukkuthamma
Kandu varum kanavellam naalai palikkum amma

Male : Sithiraiyil veil adichaa
Kaarthigaiyil mazhai varum
Sithiraiyil veil adichaa
Kaarthigaiyil mazhai varum
Ezhuthukku velai varum
Kazhuthukku maalai varum

Male : Thendral oru pattu kattum
Vandu vandhu mettu kattum
Odaiyellaam thaalam sollum
Adhai kettukittae kaalam sellum
Adhai kettukittae kaalam sellum
Adhai kettukittae kaalam sellum

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும்
வண்டு வந்து மெட்டு கட்டும்
தென்றல் ஒரு பாட்டு கட்டும்
வண்டு வந்து மெட்டு கட்டும்

ஆண் : ஓடையெல்லாம் தாளம் சொல்லும்
அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்
ஓடையெல்லாம் தாளம் சொல்லும்
அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்

ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும்
வண்டு வந்து மெட்டு கட்டும்

ஆண் : பாட்டு மறந்ததின்னு பாவி மனம் துடிக்கிறது
தூரத்து குயில் வந்து சொல்லிக் கொடுக்கிறது
மேகம் இறங்கி வந்து ராகம் படிக்கிறது
ஆளான பூவெல்லாம் பேரச் சொல்லிக் கூப்பிடுது

ஆண் : சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை
சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை
தூங்கையிலும் பாட்டு வரும்
நான் ஒண்ணும் ஊமையில்லை

ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும்
வண்டு வந்து மெட்டு கட்டும்
ஓடையெல்லாம் தாளம் சொல்லும்
அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்

ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும்
வண்டு வந்து மெட்டு கட்டும்

ஆண் : ஏரிக்கரையில் எல்லாம் எம் பாட்டு கேட்குதம்மா
நான் போகும் பாதையெல்லாம் மான் கூட்டம் வருகுதம்மா
ஏதோ ஒரு கனவு என் நெஞ்சில் இருக்குதம்மா
கண்டு வரும் கனவெல்லாம் நாளை பலிக்குமம்மா

ஆண் : சித்திரையில் வெயிலடிச்சா
கார்த்திகையில் மழையும் வரும்
சித்திரையில் வெயிலடிச்சா
கார்த்திகையில் மழையும் வரும்
எழுத்துக்கு வேளை வரும்
கழுத்துக்கு மாலை வரும்

ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும்
வண்டு வந்து மெட்டு கட்டும்
ஓடையெல்லாம் தாளம் சொல்லும்
அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்
அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்
அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here