Singers : Jayachandran and  S. Janaki

Music by : M. S. Vishwanathan

Male : sa ga ma pa ga ma ga sa
Ni sa ni pa ga ma ni pa sa
Ga ga ri ma ma ga
Pa pa ma pa dha ri ni sa

Female : Thendralathu unnidathil
Solli vaitha sedhi ennavo
Thendralathu unnidathil
Solli vaitha sedhi ennavo
Penmaiyin sorgamae
Paarvaiyil vandhatho
Kaaviyam thandhatho

Female : Thendralathu unnidathil
Solli vaitha sedhi ennavo

Male : Ullam engum pongum aasai
Indru thangaradham yeriyathu
Ullam engum pongum aasai
Indru thangaradham yeriyathu

Female : Unnai paarthu sollum vaarthai
Indru gangai yena maariyadhu
Unnai paarthu sollum vaarthai
Indru gangai yena maariyadhu

Male : Idhu varai kanavugal
Ilamaiyin ninaivugal
Eederum naalindru thaan
Female : Edhu varai thalaimurai
Adhuvarai thodarndhidum
Ennaasai unnoduthaan

Male : Penmaiyin sorgamae
Paarvaiyil vandhatho
Kaaviyam thandhatho
Female : Thendralathu unnidathil
Solli vaitha sedhi ennavo

Female : Sandham thedi sindhu paadi
Undhan sannadhikku naan varuven
Sandham thedi sindhu paadi
Undhan sannadhikku naan varuven

Male : Thanjai kovil sirpam polae
Oru muthiraiyai naan padhippen
Thanjai kovil sirpam polae
Oru muthiraiyai naan padhippen

Female : Anudhinam iravenum
Adhisaya ulaginil
Aanandha neeraaduvom
Male : Dhinamoru pudhu vagai
Kalaigalai arindhidum
Yekaantham naam paaduvom

Male : Penmaiyin sorgamae
Paarvaiyil vandhatho
Kaaviyam thandhatho
Male : Thendralathu unnidathil
Solli vaitha sedhi ennavo
Female : Penmaiyin sorgamae
Paarvaiyil vandhatho
Both : Kaaviyam thandhatho

பாடகர்கள் : ஜெயசந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ச க ம ப க ம க ச
நி ச நி பக ம நி ப ச
க க ரி ம ம க
ப ப ம ப த ரி நி ச

பெண் : தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

பெண் : தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

ஆண் : உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது

பெண் : உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது

ஆண் : இதுவரை கனவுகள்
இளமையின் நினைவுகள்
ஈடேறும் நாளின்றுதான்
பெண் : எதுவரை தலைமுறை
அதுவரை தொடர்ந்திடும்
என்னாசை உன்னோடுதான்

ஆண் : பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ
பெண் : தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண் : சந்தம் தேடி சிந்து பாடி
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்
சந்தம் தேடி சிந்து பாடி
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்

ஆண் : தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்

பெண் : அனுதினம் இரவெனும்
அதிசய உலகினில்
ஆனந்த நீராடுவோம்
ஆண் : தினமொரு புது வகை
கலைகளை அறிந்திடும்
ஏகாந்தம் நாம் பாடுவோம்

ஆண் : பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ
ஆண் : தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண் : பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
இருவர் : காவியம் தந்ததோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here