Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. Ravi

Male : Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Megamae mazhai thuligalil
Mani sathangaigal katta odivaa

Male : Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Megamae mazhai thuligalil
Mani sathangaigal katta odivaa
Thendralae malar soodava

Male : Nilavae oru malarena malarvadhum
Nizhalae mani oliyena virivadhum
Kanava illai ninaiva un mugamaa
Nilavae oru malarena malarvadhum
Nizhalae mani oliyena virivadhum
Kanava illai ninaiva un mugamaa

Male : Kaaviyam aayiram paaduvadhen manam

Male : Paarvaiyae malar soodumae
Oli punnagai valai podumae
En kangalin mazhaithuligalae
Un kaalgalil jadhi podumae
Thendralae malar soodava

Chorus : ……………………..

Male : Veenai naadhaswara mela thaalamindri
Vennilaa dhinam udhippadhillaiyaa
Veenai naadhaswara mela thaalamindri
Vennilaa dhinam udhippadhillaiyaa
Kanavu malara kann imaigal negizha
Pudhukanavu malara kan imaigal negizha

Male : Oru mazhalai vadivam un
Madiyil thavazha varum venn puraa

Male : Venn puraa vilayaada vaa
Kuyil paedaiyae kuzhaloodhi vaa
Alaikarangalil nurai kudangalil
Nadhi annaiyae seer kondu vaa

Male : Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Laala laa lala laaala laaa
Laala laa lala laaala laaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கே. ரவி

ஆண் : தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

ஆண் : தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
தென்றலே மலர் சூடவா

ஆண் : நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா

ஆண் : காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

ஆண் : பார்வையே மலர் சூடுமே
ஒளி புன்னகை வளை போடுமே
என் கண்களின் மழைத்துளிகளே
உன் கால்களில் ஜதி போடுமே
தென்றலே மலர் சூடவா

குழு : ……………………………

ஆண் : வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ
வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ

ஆண் : புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ

ஆண் : ஒரு மழலை வடிவம் உன்
மடியில் தவழ வரும் வெண் புறா…
வெண் புறா விளையாட வா
குயில் பேடையே குழலூதி வா
அலைக்கரங்களில் நுரைக் குடங்களில்
நதி அன்னையே சீர் கொண்டு வா

ஆண் : தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
லாலலா லல லாலலா
லல லாலலா லல லால லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here