Singers : Vani Jairam and K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male : Thendralil aadum
Koondhalil kanden
Mazhai konda megam

Male : Thendralil aadum
Koondhalil kanden
Mazhai konda megam
En dhevadhai amudham
Sindhidum naeram
Ini enna naanam
En dhevadhai amudham
Sindhidum naeram
Ini enna naanam

Female : Mannavan ungal
Ponnudalandro indhira logam
Mannavan ungal ponnudalandro
Indhira logam
Andhi maalaiyil
Andha maaranin kanaiyil
Yaen indha vaegam
Yaen indha vaegam

Male : Thendralil aadum
Koondhalil kanden
Mazhai konda megam

Male : Paavai udal paarkadalil
Palli kolla naan varavo
Paavai udal paarkadalil
Palli kolla naan varavo
Pani sindhum kani konjum
Poovidhazhil thaen peravo

Female : Maalai varum naeramellaam
Mannan vara paarthirundhaen
Maalai varum naeramellaam
Mannan vara paarthirundhaen
Vazhi engum vizhi vaithu
Paartha vizhi poothirundhaen

Male : Thendralil aadum
Koondhalil kanden
Mazhai konda megam

Male : Aalilaiyin orathilae
Megalaiyin naadhathilae
Aalilaiyin orathilae
Megalaiyin naadhathilae
Iravendrum pagalendrum
Kaadhal manam paarppadhundo

Female : Kalla vizhi mogathilae
Thulli vandha vaegathilae
Kalla vizhi mogathilae
Thulli vandha vaegathilae
Idhazh sindhum kavi vannam
Kaalai varai kaetpadhundo
Kaalai varai kaetpadhundo

Male : Thendralil aadum
Koondhalil kanden
Mazhai konda megam

Male : Karpagathu cholaiyilae
Pootha malar nee allavo
Vizhi ennum karuvandu
Paada vandha paattennavo

Female : Kaaviyathu naayaganin
Kattazhagu maarbinilae
Sugam enna sugamendru
Mohana pan paadiyadho
Mohana pan paadiyadho

Male : Thendralil aadum
Koondhalil kanden
Mazhai konda megam
En dhevadhai amudham
Sindhidum naeram
Ini enna naanam
Ini enna naanam

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

ஆண் : தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்

பெண் : மன்னவன் உங்கள்
பொன்னுடலன்றோ இந்திரலோகம்
மன்னவன் உங்கள்
பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில்
அந்த மாறனின் கணையில்
ஏனிந்த வேகம்
ஏனிந்த வேகம்

ஆண் : தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

ஆண் : பாவையுடல் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பாவையுடல் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும்
பூவிதழில் தேன் பெறவோ

பெண் : மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வரப் பார்த்திருந்தேன்
மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வரப் பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்துப்
பார்த்த விழி பூத்திருந்தேன்

ஆண் : தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

ஆண் : ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ

பெண் : கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ

ஆண் : தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

ஆண் : கற்பகத்துச் சொலையிலே
பூத்த மலர் நீயல்லவோ
விழியென்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ

பெண் : காவியத்து நாயகினின்
கட்டழகின் மார்பினிலே
சுகமென்ன சுகமென்று
மோகனப் பண் பாடியதோ
மோகனப் பண் பாடியதோ

ஆண் : தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here