Singers : Krishnachandran and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Male : Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil

Female : Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil

Male : Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae

Male : Muththucharam punnaigaiyil minnalidum padhumai
Paththu viral viththaigalil kolamidum pudhumai
Female : Thotta idam poo manakkum meni
Patta idam naan mayanga vaa nee

Male : Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Female : Anjuvathum kenjuvathum puththampudhu ilamai

Female : Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Male : Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil

Female : Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae

Female : Angum ingum thottuthottu
Sonna kadhai pothum
Angam engum thanga vaiththu
Ponathiyyaa mogam

Male : Thangamena nee jolikkumpothu
Yaenguthadi en manathu paaru

Ffemale : Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Male : Antha sugam nenjil vara puththampudhu kanavu

Male : Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Female : Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண் : தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்

ஆண் : தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே

ஆண் : முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை
பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை
பெண் : தொட்ட இடம் பூ மணக்கும் மேனி
பட்ட இடம் நான் மயங்க வா நீ

ஆண் : பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
பெண் : அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை

பெண் : தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
ஆண் : பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண் : தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே

பெண் : அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு
சொன்னக் கதை போதும்
அங்கம் எங்கும் தங்க வைத்து
போனதய்யா மோகம்

ஆண் : தங்கமென நீ ஜொலிக்கும்போது
ஏங்குதடி என் மனது பாரு

பெண் : போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
ஆண் : அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு

ஆண் : தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பெண் : பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here