Singer : Akshaya Sivakumar

Music by : Dheena Dhayalan

Lyrics by : Madhan Karky

Female : Theriyadha thendral
Ennai thaluvudhu yeno
Puriyaadha pookkal
Ennul thirakkudhu thaano

Female : Thunaiyaga nee en kooda
Nadathidum podhu
Valiyavun endhan
Naanam uthirththiduveno

Female : Vilundhen pidiththai
Aludhen siriththai
Erindhen anaiththai
En thaayin punnagaiyaai
Isaaiyaai idhayam
Variyaai ulagam
Mudivili nadanamaai

Female : Tholan endru
Solli paarththen
Kaval endrum
Solli paarththen
Innum nooru
Pattam thandhen
Podhavillaiyae

Female : Andha otrai
Sollai solla
Veeramangai naanum alla
Neeyae adhai sonnaal alagu

Female : Midhavai nilavaai
Sitharum oliyaai
Adhile kanavaai
Neeyae

Female : Uravin pudhiro
Thiravaa mugaiyo
Avai dhaanaai
Avilnthaal thaan alagu

Female : Inmugam menkural
Venmoli ena ilukkirai
Enai un vasam
Nee eerththu kolkindrai

Female : En nilal un nilal
Otti kondae kondaadum
Mudivilli nadanamaai
Mudivilli nadanamaai

Female : Paadam ena undhan
Paarvai enil
Naal muluthum padipen
Vaanam ena undhan
Vaarthai enil
Kopaiyaai manam

Female : Veraethum ketkavillai
Kaadhai mooda villai
Yaarum pesa villai
Vasam ennum mullai
Kaatrum veesa villai
Moochum thevai illai
Udan udan udan udan nee irukaiyilae

Female : Kovil pogavillai
Poga thondravillai
Ennai kaanavillai
Unnai unnai unnai
Arugil arugil nan kaandu
Urugi urugi naan vaalnthale
Pothatha enna thollai

Female : Aayiram vaanamai maarinaaiyae
Nan idhil eerida kooruvaaya
Aayiram megamai thoorinaayae
Kadhalaai ennilae veeluvaaya

Female : Vilundhen pidiththai
Aludhen siriththai
Erindhen anaiththai
En thaayin punnagaiyaai

Female : Isaaiyaai idhayam
Variyaai ulagam
Mudivili nadanamaai
Mudivili nadanamaai

பாடகி : அக்ஷயா சிவகுமார்

இசை அமைப்பாளர் : தீன தயாளன்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

பெண் : தெரியாத தென்றல்
என்னைத் தழுவுது ஏனோ?
புரியாத பூக்கள்
என்னுள் திறக்குதுதானோ?

பெண் : துணையாக நீ என்
கூட நடந்திடும் போது
வழியாவும் எந்தன்
நாணம் உதிர்த்துடுவேனோ?

பெண் : விழுந்தேன் பிடித்தாய்
அழுதேன் சிரித்தாய்
எரிந்தேன் அணைத்தாய்
என் தாயின் புன்னகையாய்

பெண் : இசையாய் இதயம்
வரியாய் உலகம்
முடிவிலி நடனமாய்!

பெண் : தோழன் என்று சொல்லிப் பார்த்தேன்
காவல் என்றும் சொல்லிப் பார்த்தேன்
இன்னும் நூறு பட்டம் தந்தேன்
போதவில்லையே!

பெண் : அந்தச் ஒற்றை செல்லச் சொல்லைச்
வீரமங்கை நானும் அல்ல
நீயே அதைச் சொன்னால் அழகு

பெண் : மிதவை நிலவாய்
சிதறும் ஒளியாய்
அதிலே கனவாய் நீயே!

பெண் : உறவின் புதிரோ?
திறவா முகையோ?
அவை தானாய் அவிழ்ந்தால்தான் அழகு

பெண் : இன்முகம் மென்குரல்
வெண்மொழி என இழுக்கிறாய்
எனை உன் வசம்
நீ ஈர்த்துக் கொள்கின்றாய்

பெண் : என் நிழல் உன் நிழல்
ஒட்டிக் கொண்டே கொண்டாடும்
முடிவிலி நடனமாய்!
முடிவிலி நடனமாய்!

பெண் : பாடம் என உந்தன் பார்வையெனில்
நாள் முழுதும் படிப்பேன்
பானம் என உன்தன் வார்த்தையெனில்
கோப்பையாய் மனம்

பெண் : வேறெதுவும் கேட்கவில்லை
காலம் ஓடவில்லை
யாரும் பேசவில்லை
வாசம் ஏதுமில்லை
காற்றும் வீசவில்லை
மூச்சும் தேவையில்லை
உடன் உடன் உடன் உடன் நீ இருக்கையிலே

பெண் : கோவில் போகவில்லை
போகத் தோன்றவில்லை
என்னைக் காணவில்லை
உன்னை உன்னை உன்னை
அருகில் அருகில் நான் கண்டு
உருகி உருகி நான் உண்டு
வாழ்ந்தாலே போதாதா என்ன தொல்லை..

பெண் : ஆயிரம் வானமாய் மாறினாயே!
நான் எதில் ஏறிட? கூறுவாயா?
ஆயிரம் மேகமாய் தூறினாயே!
காதலாய் என்னிலே வீழுவாயா?

பெண் : விழுந்தேன் பிடித்தாய்
அழுதேன் சிரித்தாய்
எரிந்தேன் அணைத்தாய்
என் தாயின் புன்னகையாய்

பெண் : இசையாய் இதயம்
வரியாய் உலகம்
முடிவிலி நடனமாய்!
முடிவிலி நடனமாய்!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here