Singers : J. P. Chandrababu and Jikki

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Humming : …………

Female : …………….

Male : Thillaana paattu paadi kulla thaaraa
Ingu kullaa nee podaadhae kulla thaaraa
Thillaana paattu paadi kulla thaaraa
Ingu kullaa nee podaadhae kulla thaaraa
Female : Villaadhi villarellaam vambu kaaraa
Villaadhi villarellaam vambu kaaraa
Endhan vizhiyaalae paliyaavaar vambukkaaraa
Male : Aayyayyo….
Female : Vizhiyaalae baliyaavaar vambukkaaraa

Male : Thillaanaa… thillaanaa…
Thillaana paattu paadi kulla thaaraa
Ingu kullaa nee podaadhae kulla thaaraa
Aaa..aa..aa..aaa….
Andha maamunivarellaam adanginaar…
Female : Enna

Male : Andha kaalam…
Aaa..aa.aa.aa.aa..ae..ae..ae…
Adhai arindhadhaal ungal vizhiyinaalae
Aangal asaiya maattaar indha kaalam…
Indha kaalam
Thillaana paattu paadi kulla thaaraa
Ingu kullaa nee podaadhae kulla thaaraa
Thillaanaa… thillaanaa…
Thillaana paattu paadi kulla thaaraa
Ingu kullaa nee podaadhae kulla thaaraa

Female : Vaazhaippazham vaendaamennum kurangu polae
Vaayaalavil paesiduvaar…. piragu
Vaithiyar ariyaadha paithiyam pidithaengi
Valiya vandhu kaalil vizhuvaar
Aaa..aa.aa.aaa.aa….
Villaadhi villarellaam vambu kaaraa
Endhan vizhiyaalae baliyaavaar vambukkaaraa
Villaadhi villarellaam vambu kaaraa
Endhan vizhiyaalae baliyaavaar vambukkaaraa

Male : Appadiyaa…
Female : Pinnae eppadiyaam…

Female : Neerillaadha nilamillae nilamillaadha maramillae
Maramillaadha vidhai illae vidhai illaadha maramillae
Aanillaadha penn illae penn illaadha aanillae
Purinjidhaa….

Male : Puriyudhae… puriyudhae puriyudhae…
Malaiyaana emmanasa kulla thaaraa
Arivu uliyaalae paethuttiyae kulla thaaraa
Malaiyaana emmanasa kulla thaaraa
Arivu uliyaalae paethuttiyae kulla thaaraa
Female : Kallaana aampillaiyum vambukkaaraa
Kallaana aampillaiyum vambukkaaraa
Kovai kaniyaalae baliyaavaar vambukkaaraa
Kaniyaalae baliyaavaar vambukkaaraa

Both : Thillaanaa… thillaanaa…
Thillaana paattu paadi aaduvomae
Naam ellorum ondraaga vaazhvome

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

முனங்கல் : .……….

பெண் : ……………

ஆண் : தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா

பெண் : வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
ஆண் : அய்யய்யோ
பெண் : விழியாலே பலியாவார் வம்புக்காரா

ஆண் : தில்லானா ..தில்லானா
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
ஆ ..ஆஆ …ஆஆ ….
அந்த மாமுனிவரெல்லாம் அடங்கினார்
பெண் : என்ன

ஆண் : அந்த காலம்
ஆ ..ஆஆ …ஆஆ ….ஏ.. ஏ… ஏ…
அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே
ஆண்கள் அசைய மாட்டார் இந்த காலம்
இந்த காலம்
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
தில்லானா ..தில்லானா
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா

பெண் : வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்கு போலே
வாயளவில் பேசிடுவார் …. பிறகு
வைத்தியர் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி
வலிய வந்து காலில் விழுவார்
ஆ ..ஆஆ …ஆஆ ….
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா

ஆண் : அப்படியா
பெண் : பின்னே எப்படியாம்

பெண் : நீரில்லாத நிலமில்லே நிலமில்லாத மரமில்லே
மரமில்லாத விதை இல்லே விதை இல்லாத மரமில்லே
ஆணில்லாத பெண் இல்லே பெண் இல்லாத ஆணில்லே
புரிஞ்சிதா ….

ஆண் : புரியுதே …புரியுதே புரியுதே …
மலையான எம்மனச குள்ள தாரா
அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா
மலையான எம்மனச குள்ள தாரா
அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா

பெண் : கல்லான ஆம்பிள்ளையும் வம்புக்காரா
கல்லான ஆம்பிள்ளையும் வம்புக்காரா
கோவை கனியாலே பலியாவார் வம்புக்காரா
கனியாலே பலியாவார் வம்புக்காரா

இருவர் : தில்லானா ..தில்லானா
தில்லானா பாட்டு பாடி ஆடுவோமே
நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here