Singers : M. R. Vijaya and T. M. Soundararajan

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Thirikooda Rasappa Kavirayar

Male : ………….

Female : ………………..

Male : Thingal mudi soodum malai
Thendral vilaiyaadum malai
Thangumugil soozhum malai
Thamizh munivan vaazhum malai

Male : Thingal mudi soodum malai
Thendral vilaiyaadum malai
Thangumugil soozhum malai
Thamizh munivan vaazhum malai

Male : Angaiyarkan ammai
Thiruvarul suranthu pozhivathenna
Angaiyarkan ammai
Thiruvarul suranthu pozhivathenna
Pongaruvi thoongumalai
Pothiyamalaiyen malaiyae….

Female : Kanthanai pol vanthavanai
Kadhal mozhi sonnavanai
Ennavanai thennavanai
Mannavanai vaazhththukiraen

Female : Kanthanai pol vanthavanai
Kadhal mozhi sonnavanai
Ennavanai thennavanai
Mannavanai vaazhththukiraen

Female : Thingalae maanidaraai
Thaedi ingu vanthathu pol
Engal kula deivam tharum
Innarulin vadivam idho….

Female : Thingalae maanidaraai
Thaedi ingu vanthathu pol
Engal kula deivam tharum
Innarulin vadivam idho….

Male : Arampai dhesa villum
Virumbi aasai kollum
Puruvaththaal mangai paruvaththaal
Arampai dhesa villum
Virumbi aasai kollum
Puruvaththaal mangai paruvaththaal

Male : Enthan arivai mayakkum
Oru Karvam irukkum mangai
Paruvaththaal villu puruvaththaal

Male : Pallin azhagai etti paarkkum
Mookkil oru muththinaal mathi mugaththinaal
Vizhi pazhagum vadivil thangi
Azhagu soodikollum
Mugaththiaal mathi mugaththinaal

Female : Angamevum aravintha mamalarai
Kandu vandenavae vanthanai
Angamevum aravintha mamalarai
Kandu vandenavae vanthanai

Female : Malar sendu konderinthu kondenai
Kadhal sinthu kai padikka sanga tamil eduththu
Kadhal sinthu kai padikka sanga tamil eduththu
Sinthai kirangidavum seithanai
Antha senthil velaniyum munthinai
Antha senthil velaniyum munthinai
Antha senthil velaniyum munthinai

Male : Munthi munthi vantha entha piraviyilum
Sontham pol uravu kondanai
Munthi munthi vantha entha piraviyilum
Sontham pol uravu kondanai
Vinai thinthinaikulava vanthaviraiyenavae
Vanthinainthaaiyae enthanai
Vinai thinthinaikulava vanthaviraiyenavae
Vanthinainthaaiyae enthanai
Vanthu sonthampol uravu kondanai
Vanthu sonthampol uravu kondanai

Male : Arampai dhesa villum
Virumbi aasai kollum
Puruvaththaal mangai paruvaththaal
Ohho ho… ho oohho….

பாடகர்கள் : எம். ஆர். விஜயா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : திரிகூட ராசப்ப கவிராயர்

ஆண் : ………………………

பெண் : ………………………….

ஆண் : திங்கள் முடி சூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்குமுகில் சூழும் மலை
தமிழ் முனிவன் வாழும் மலை

ஆண் : திங்கள் முடி சூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்குமுகில் சூழும் மலை
தமிழ் முனிவன் வாழும் மலை

ஆண் : அங்கையற்கண் அம்மை
திருவருள் சுரந்து பொழிவதென்ன
அங்கையற்கண் அம்மை
திருவருள் சுரந்து பொழிவதென்ன
பொங்கருவி தூங்குமலை
பொதியமலையென் மலையே….

பெண் : கந்தனைப் போல் வந்தவனை
காதல் மொழி சொன்னவனை
என்னவனை தென்னவனை
மன்னவனை வாழ்த்துகிறேன்

பெண் : கந்தனைப் போல் வந்தவனை
காதல் மொழி சொன்னவனை
என்னவனை தென்னவனை
மன்னவனை வாழ்த்துகிறேன்

பெண் : திங்களே மானிடராய்
தேடி இங்கு வந்தது போல்
எங்கள் குல தெய்வம் தரும்
இன்னருளின் வடிவம் இதோ…

பெண் : திங்களே மானிடராய்
தேடி இங்கு வந்தது போல்
எங்கள் குல தெய்வம் தரும்
இன்னருளின் வடிவம் இதோ…

ஆண் : அரம்பை தேச வில்லும்
விரும்பி ஆசைக் கொள்ளும்
புருவத்தாள் மங்கை பருவத்தாள்
அரம்பை தேச வில்லும்
விரும்பி ஆசைக் கொள்ளும்
புருவத்தாள் மங்கை பருவத்தாள்

ஆண் : எந்தன் அறிவை மயக்கும் ஒரு
கர்வம் இருக்கும் மங்கை
பருவத்தாள் வில்லுப் புருவத்தாள்..

ஆண் : பல்லின் அழகை எட்டி பார்க்கும்
மூக்கில் ஒரு முத்தினால் மதி முகத்தினாள்
விழி பழகும் வடிவில் தங்கி
அழகு குடிகொள்ளும்
முகத்தினாள் மதி முகத்தினாள்

பெண் : அங்கமேவும் அரவிந்த மாமலரை
கண்டு வண்டெனவே வந்தனை
அங்கமேவும் அரவிந்த மாமலரை
கண்டு வண்டெனவே வந்தனை

பெண் : மலர் செண்டு கொண்டெறிந்து கொண்டெனை
காதல் சிந்து கவி படிக்க சங்க தமிழ் எடுத்து
காதல் சிந்து கவி படிக்க சங்க தமிழ் எடுத்து
சிந்தை கிறங்கிடவும் செய்தனை
அந்த செந்தில் வேலனையும் முந்தினை….
அந்த செந்தில் வேலனையும் முந்தினை….
அந்த செந்தில் வேலனையும் முந்தினை….

ஆண் : முந்தி முந்தி வந்த எந்த பிறவியிலும்
சொந்தம் போல் உறவு கொண்டனை
முந்தி முந்தி வந்த எந்த பிறவியிலும்
சொந்தம் போல் உறவு கொண்டனை
வினை தந்தினையகுலவ வந்தவிரையெனவே
வந்திணைந்தனையே எந்தனை
வினை தந்தினையகுலவ வந்தவிரையெனவே
வந்திணைந்தனையே எந்தனை
வந்து சொந்தம்போல் உறவு கொண்டனை….
வந்து சொந்தம்போல் உறவு கொண்டனை….

ஆண் : அரம்பை தேச வில்லும்
விரும்பி ஆசைக் கொள்ளும்
புருவத்தாள் மங்கை பருவத்தாள்
ஓஹோ ஹோ ஹோ ஓஹ்ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here