Singer : Saindhavi

Music by : Sam C.S.

Lyrics by : Uma Devi

Female : Naan thiraikadala nee dhiraviyama
Theda theda
Naan karuporula nee arunthamizha
Paada paada

Female : Kaatrin dhisai arinthu
Moogil isaipadhu pol
Uyirgal pasi theerkum thaai neeyadi

Female : Thoorum thooral ellam
Aatril servadhu poal
Serum sonthamellam neethanadi
Ne podhum vaazhvai vaazha

Female : Theadi naan naadidum
Dheivam neeyadi
Vaadi naan veezhgayil thaangum
Thaiyum nee

Female : Kaalathin odaiyil kaagitha odamai
Padhyil moozhgidum kolam niyamaa
Poove inimel adi en vazhi ariven
Unmozhyinile adi en ulagariven

Female : Pillai nee thaai thaane
Thaaiyana seai naane
Kanne kani amuthe

Female : Naan thiraikadala nee dhiraviyama
Theda theda

Female : Vaalmunai kaatiye vaazhkai oduthe
Paal mugam paarthu thaan
Vaazha thonuthe

Female : Kannimai kootile vaithu pootava
karanam aayiram thaandi kaakkava

Female : Un nizhal marainthaal adi
En nilai kulaiyum
Un thalai kothi en irvanaiyum
Muthangal soraaga nee ootum thaayaaga
Mayile mayilirage

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பெண் : நான் திரைக்கடலா நீ திரவியமா
தேட தேட
நான் கருப்பொருளா நீ அருந்தமிழா
பாட பாட

பெண் : காற்றின் திசை அறிந்து
மூங்கில் இசைப்பது போல்
உயிர்கள் பசி தீர்க்கும் தாய் நீயடி

பெண் : தூறும் தூறல் எல்லாம்
ஆற்றில் சேர்வது போல்
சேரும் சொந்தம் எல்லாம் நீதானடி
நீ போதும் வாழவை வாழ

பெண் : தேடி நான் நாடிடும்
தெய்வம் நீயடி
வாடி நான் வீழ்கையில் தாங்கும்
தாயும் நீ

பெண் : காலத்தின் ஓடையில் காகித ஓடமாய்
பாதியில் மூழ்கிடும் கோலம் நியாயமா
பூவே இனிமேல் அடி என் வழி அறிவேன்
உன்மொழியினிலே அடி என் உலகறிவேன்

பெண் : பிள்ளை நீ தாய் தானே
தாயான சேய் நானே
கண்ணே கனி அமுதே

பெண் : நான் திரைக்கடலா நீ திரவியமா
தேட தேட

பெண் : வாள்முனை காட்டியே வாழ்க்கை ஓடுதே
பால் முகம் பார்த்து தான்
வாழ தோணுதே

பெண் : கண்ணிமை கூட்டிலே வைத்து பூட்டவா
காரணம் ஆயிரம் தாண்டி காக்கவா

பெண் : உன் நிழல் மறைந்தாள் அடி
என் நிலை குலையும்
உன் தலை கோதி என் இரவனையும்
முத்தங்கள் சோறாக நீ ஊட்டும் தாயாக
மயிலே மயிலிறகே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here