Singers : Vani Jairam and Seerkazhi Givindarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Thirukoyil katta enni
Porupposu vantha ennai
Veruppodu paarththaayae perumaalae
Palar mithiththaalum vidamaattaen thirumaalae

Male : Thirukoyil katta enni
Porupposu vantha ennai
Veruppodu paarththaayae perumaalae
Palar mithiththaalum vidamaattaen thirumaalae

Male : Kanjinagar varatharaja
Un karunai perumai enna lesa
Kanjinagar varatharaja
Un karunai perumai enna lesa
Vaanjaiyudan enakku arula
Kanji varathaa virainthodi varuga

Male : Thiruppani seivatharkku udanthai
Nee thirukoyilil kondirukkum kuzhanthai
Thiruppani seivatharkku udanthai
Nee thirukoyilil kondirukkum kuzhanthai

Female : Thinanthorum sevai seiya varava
Ranga srivilli puththoorin thalaivaa
Thinanthorum sevai seiya varava
Ranga srivilli puththoorin thalaivaa

Chorus : Bhoologa vaigunthavaasaa pugazhaagum
Sri ranga naatha sri ranga naatha
Sri ranga naatha sri ranga naatha

Male : Thiruvarangaththu ranganaathaa
En sevaikku thunai puriya vaa vaa

Chorus : Anantha pathmanaaba anantha vishvaroopaa

Female : Thiruvananthai pathmanaaba
Unakku singaara koyil katta vaa
Thiruvananthai pathmanaaba
Unakku singaara koyil katta vaa

Chorus : Naarayana naarayana naaraayana naarayana
Naarayana naarayana naaraayana naarayana
Naarayana naarayana naaraayana naarayana

Female : Guruvayur thanniloru kuzhanthai
Nadakka konjuthammaa irandu salangai
Guruvayur thanniloru kuzhanthai
Nadakka konjuthammaa irandu salangai

Female : Vara vendum srikrishna bala
Niraintha varathodu anantha laalaa
Vara vendum srikrishna bala
Niraintha varathodu anantha laalaa

Chorus : Pazhamai niraintha thirupathiyae
Engal azhagar malai karunai nithiyae

Male : Solingar aalugindra mugamae
Paavam tholaivatharkku neeraadum kulame
Solingar aalugindra mugamae
Paavam tholaivatharkku neeraadum kulame

Male : Thondu seiyum adiyaargal thamakku
Un sodhanai bodhumadaa
Sodhanai theernthu un paathmalar thannil
Engalai saernthidadaa

Male : Thondu seiyum adiyaargal thamakku
Un sodhanai bodhumadaa
Sodhanai theernthu un paathmalar thannil
Engalai saernthidadaa

Male : Kondathu kolgai endrathil nindravar
Kumuruthal kelumadaa
Kondathu kolgai endrathil nindravar
Kumuruthal kelumadaa
Koyil piranthida vilaiyenil
Vaigundathaththil saerththidaa
Vaigundathaththil saerththidaa
Vaigundathaththil saerththidaa

Female : Narasimma narasimma narasimma
Vaigundaa vaigundaa vaigundaa
Sriranga sriranga sriranga

Female : Mai vanna maeni konda nerinatha
Thirumagal thannai marbil vaiththa malar marba
Mai vanna maeni konda nerinatha
Thirumagal thannai marbil vaiththa malar marba

Female : Nei koondhal vedhavalli thalaimagalae
Manam nirainthirukkum alamelu manathavanae

Female : Eththanaiyo ulagil vadiveduththaai
Angu ellaa vadivilum penneduththaai
Pithu pidiththa pennai ariyaayo
Indru piththam thelinthathendru arulvaayp

Female : Paandurangaa pandarinaatha
Pannagasayanaa manivannaa
Patmanabanae veeraraagavaa
Aadhikeshava srikrishna

Chorus : Rishikesha rishikesha sriranga sriranga
Thirumaalae thirumaalae narasimmaa narasimmaa
Narasimmaa narasimmaa rishikesha rishikesha
Sriranga sriranga thirumaalae thirumaalae

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே
பலர் மிதித்தாலும் விடமாட்டேன் திருமாலே

ஆண் : திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே
பலர் மிதித்தாலும் விடமாட்டேன் திருமாலே

ஆண் : காஞ்சிநகர் வரதராஜா
உன் கருணைப் பெருமை என்ன லேசா
காஞ்சிநகர் வரதராஜா
உன் கருணைப் பெருமை என்ன லேசா
வாஞ்சையுடன் எனக்கு அருள
காஞ்சி வரதா விரைந்தோடி வருக

ஆண் : திருப்பணி செய்வதற்கு உடந்தை
நீ திருக்கோயிலில் கொண்டிருக்கும் குழந்தை
திருப்பணி செய்வதற்கு உடந்தை
நீ திருக்கோயிலில் கொண்டிருக்கும் குழந்தை

பெண் : தினந்தோறும் சேவை செய்ய வரவா
ரங்கா ஸ்ரீவில்லிப் புத்தூரின் தலைவா
தினந்தோறும் சேவை செய்ய வரவா
ரங்கா ஸ்ரீவில்லிப் புத்தூரின் தலைவா

குழு : பூலோக வைகுந்தவாசா புகழோங்கும்
ஸ்ரீரங்கநாதா ஸ்ரீரங்கநாதா
ஸ்ரீரங்கநாதா ஸ்ரீரங்கநாதா………

ஆண் : திருவரங்கத்து ரங்கநாதா
என் சேவைக்குத் துணை புரிய வா வா

குழு : அனந்த பத்மநாபா ஆனந்த விஸ்வரூபா

பெண் : திருவனந்தை பத்மநாபா
உனக்கு சிங்கார கோயில் கட்ட வா….
திருவனந்தை பத்மநாபா
உனக்கு சிங்கார கோயில் கட்ட வா….

குழு : நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண கிருஷ்ணா

பெண் : குருவாயூர் தன்னிலொரு குழந்தை
நடக்கக் கொஞ்சுதம்மா இரண்டு சலங்கை
குருவாயூர் தன்னிலொரு குழந்தை
நடக்கக் கொஞ்சுதம்மா இரண்டு சலங்கை

பெண் : வர வேண்டும் ஸ்ரீகிருஷ்ண பாலா
நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா
வர வேண்டும் ஸ்ரீகிருஷ்ண பாலா
நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா

குழு : பழமை நிறைந்த திருப்பதியே
எங்கள் அழகர் மலைக் கருணை நிதியே

ஆண் : சோளிங்கர் ஆளுகின்ற முகமே
பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே
சோளிங்கர் ஆளுகின்ற முகமே
பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே

ஆண் : தொண்டு செய்யும் அடியார்கள் தமக்கு
உன் சோதனை போதுமடா
சோதனை தீர்த்து உன் பாதமலர் தன்னில்
எங்களைச் சேர்த்திடடா

ஆண் : தொண்டு செய்யும் அடியார்கள் தமக்கு
உன் சோதனை போதுமடா
சோதனை தீர்த்து உன் பாதமலர் தன்னில்
எங்களைச் சேர்த்திடடா

ஆண் : கொண்டது கொள்கை என்றதில் நின்றவர்
குமுறுதல் கேளுமடா
கொண்டது கொள்கை என்றதில் நின்றவர்
குமுறுதல் கேளுமடா
கோயில் பிறந்திட வில்லையெனில்
வைகுண்டதத்தில் சேர்த்திடா
வைகுண்டதத்தில் சேர்த்திடா
வைகுண்டதத்தில் சேர்த்திடா

பெண் : நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
வைகுண்டா வைகுண்டா வைகுண்டா
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா

பெண் : மை வண்ண மேனி கொண்ட ஸ்ரீநாதா
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா
மை வண்ண மேனி கொண்ட ஸ்ரீநாதா
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா

பெண் : நெய்க் கூந்தல் வேதவல்லி தலைமகளே
மனம் நிறைந்திருக்கும் அலமேலு மணந்தவனே

பெண் : எத்தனையோ உலகில் வடிவெடுத்தாய்
அங்கு எல்லா வடிவிலும் பெண்ணெடுத்தாய்
பித்துப் பிடித்த பெண்ணை அறியாயோ
இன்று பித்தம் தெளிந்ததென்று அருள்வாயோ

பெண் : பாண்டுரங்கா பண்டரிநாதா
பன்னகசயனா மணிவண்ணா
பத்மநாபனே வீரராகவா
ஆதிகேசவா ஸ்ரீகிருஷ்ணா…….

குழு : ரிஷிகேஷா ரிஷிகேஷா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா
திருமாலே திருமாலே நரசிம்மா நரசிம்மா
நரசிம்மா நரசிம்மா ரிஷிகேஷா ரிஷிகேஷா
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா திருமாலே திருமாலே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here