Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male : Thirumaal perumaikku nigaraedhu…
Thirumaal perumaikku nigaraedhu
Undhan thiruvadi nizhalukku inaiyaedhu
Perumaanae undhan thirunaamam
Pathu peyargalil vilangum avathaaram
Male : Thirumaal perumaikku nigaraedhu…
Male : Kadal naduvae veezhndha sadhur vaedham
Thannai kaappadharkkae konda avathaaram
Macha avathaaram
Male : Asurargal kodumaikku mudivaagum
Engal achudhanae undhan avathaaram
Koorma avathaaram
Male : Boomiyai kaathida oru kaalam
Nee punaidhadhu mattroru avathaaram
Varaaga avathaaram
Male : Naaraayanaa ennum thiru naamam
Nilai naattida innum oru avathaaram
Narasimma avathaaram
Male : Maavali siram thannil kaal vaithu
Indha mannum vinnum alandha avathaaram
Vaamana avathaaram
Male : Thaai thandhai sollae uyar vaedham
Endru saattriyadhum oru avathaaram
Parasuraamar avathaaram
Male : Oruvanukku ulagil oru thaaram
Enum uyarvinai kaattiya avathaaram
Raama avathaaram
Male : Ragu kulam kondadhu oru raaman
Pinbu yedhu kulam kandadhu pala raaman
Balaraaman
Male : Arasu murai vazhi neri kaakka
Nee adainthathu innoru avathaaram
Kannan avathaaram
Male : Vidhi nadandhadhena madhi mudindhadhena
Vinaiyin payanae uruvaaga
Nilai marandhavarum neri izhandhavarum
Unarum vannam thelivaaga
Innal ozhithu puvi kaakka
Nee edukka vendum oru avathaaram
Kalki avathaaram
Male : Thirumaal perumaikku nigaraedhu
Undhan thiruvadi nizhalukku inaiyaedhu
Thirumaal perumaikku nigaraedhu
Nigaraedhu… nigaraedhu…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது…..
திருமால் பெருமைக்கு நிகரேது…..
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது…..
ஆண் : கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம்
தன்னைக் காப்பதற்கே கொண்ட அவதாரம்
மச்ச அவதாரம்
ஆண் : அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும்
எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம்
கூர்ம அவதாரம்
ஆண் : பூமியைக் காத்திட ஒரு காலம்
நீ புனைந்தது மற்றொரு அவதாரம்
வராக அவதாரம்
ஆண் : நாராயணா என்னும் திருநாமம்
நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
நரசிம்ம அவதாரம்
ஆண் : மாவலிச் சிரம் தன்னில் கால் வைத்து
இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
வாமன அவதாரம்
ஆண் : தாய் தந்தை சொல்லே உயர் வேதம்
என்று சாற்றியதும் ஒரு அவதாரம்
பரசுராம அவதாரம்
ஆண் : ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம்
எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்
ராம அவதாரம்
ஆண் : ரகு குலம் கொண்டது ஒரு ராமன்
பின்பு யது குலம் கண்டது பலராமன்
பலராமன்
ஆண் : அரசு முறை வழிநெறி காக்க
நீ அடைந்தது இன்னொரு அவதாரம்
கண்ணன் அவதாரம்
ஆண் : விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக
இன்னல் ஒழித்து புவி காக்க
நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
கல்கி அவதாரம்
ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது…..
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
திருமால் பெருமைக்கு நிகரேது…..
நிகரேது…..நிகரேது…..