Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Raamaa… raamaa… raamaa…
Thirumangalyam kollum murai illaiyo
Ullam ariyaadha maangalyam thavarillaiyo
Thirumangalyam kollum murai illaiyo
Ullam ariyaadha maangalyam thavarillaiyo

Female : Kannai moodi kattum thaali chadhamaa
Indha kalyaanam unakke sammadhamaa
Kannai moodi kattum thaali chadhamaa
Indha kalyaanam unakke sammadhamaa
Yerkavo.. edukkavo.. neeyae sol
Raamaa.. raamaa… raamaa…

Female : Manamedai meedhu aniyaadhapodhum
Maangalyam endrum punidham
Manadhaalum avanai ninaiyaadhapodhum
Avan thandha thaali amudham
Kazhatrinaalum adhai agatrinaalum ini
Kanniyaavadhillai magalae
Kanavan endroruvan aana pinbu idhai
Kaakka vaendum kulamagalae

Female : Annai janakiyae andha raamapiraan
Thandha thaaliyalla indha thaali…
Annai janakiyae andha raamapiraan
Thandha thaaliyalla indha thaali…
Idhu aathirathil vandha avasarathil
Ennai siraiyidavae vandha vaeli
Idhai thaangi kondaal naan paavi…

Female : Kannai moodi kattum thaali chadhamaa
Indha kalyaanam unakke sammadhamaa
Thirumangalyam kollum murai illaiyo
Ullam ariyaadha maangalyam thavarillaiyo
Kannai moodi kattum thaali chadhamaa
Indha kalyaanam unakke sammadhamaa

Female : Malar maalaithannai silai meedhu soodi
Vazhipaadu seiyum kulamae
Silaithannai kettu orupodhum andha
Malar poodavillai manamae
Oruvan anivadhena oruththi peruvadhena
Mudindhu pona kadhai magalae
Avanai neengi nee vaazhndhapodhum
Ini idhanai neekkuvadhu thavarae

Female : Ival yaarukkendrae andha devanavan
Vidhi vaguththu vittaan andha naalil
Adhai maatridavo illai maruthidavo
Vazhi illaiyammaa indha naattil
Idhu thaayin vazhi vandha panbu

Female : Indha panpaadu maraiyaadhadhu
Adhu unnodu mudiyaadhadhu
Indha mannodu uravaanadhu…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ராமா…… ராமா….. ராமா……
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ

பெண் : கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
ஏற்கவோ எடுக்கவோ நீயே சொல்
ராமா…… ராமா….. ராமா……

பெண் : மணமேடை மீது அணியாதபோதும்
மாங்கல்யம் என்றும் புனிதம்
மனதாலும் அவனை நினையாதபோதும்
அவன் தந்த தாலி அமுதம்
கழற்றினாலும் இதை அகற்றினாலும்
இனி கன்னியாவதில்லை மகளே
கணவன் என்றவன் ஆனப் பின்பு
இதைக் காக்க வேண்டும் குல மகளே

பெண் : அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான்
தந்த தாலியல்ல இந்த தாலி
அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான்
தந்த தாலியல்ல இந்த தாலி
இது ஆத்திரத்தில் வந்த அவசரத்தில்
என்னை சிறையிடவே வந்த தாலி
இதைத் தாங்கிக் கொண்டால் நான் பாவி

பெண் : கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா

பெண் : மலர் மாலைதனை சிலை மீது சூடி
வழிப்பாடு செய்யும் குலமே
சிலைதனைக் கேட்டு ஒருபோதும்
அந்த மலர் சூடவில்லை மனமே
ஒருவன் அணிவதென்ன ஒருத்தி பெறுவதென்ன
முடிந்து போன கதை மகளே
அவனை நீங்கி நீ வாழ்ந்தபோதும்
இனி இதனை நீக்குவது தவறே

பெண் : இவள் யாருக்கென்றே அந்த தேவனவன்
விதி வகுத்து விட்டான் அந்த நாளில்
அதை மாற்றிடவோ இல்லை மறுத்திடவோ
வழியில்லையம்மா இந்த நாட்டில்
இது தாயின் வழி வந்த பண்பு

பெண் : இந்த பண்பாடு மறையாதது அது
உன்னோடு முடியாதது
இந்த மண்ணோடு உறவானது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here