Singer : K. Jamunarani

Music by : Master Venu

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Thirupathi venkatesane unna nambi
Irukkira indha dasanae
Thirupathi venkatesane unna nambi
Irukkira indha dasanae
Poruppaana janangal ingae
Punniyam theda vaaranga
Poruppaana janangal ingae
Punniyam theda vaaranga
Pusikkavam naanga ketta
Podaannnuttu poranga
Thirupathi venkatesane unna nambi
Irukkira indha dasanae

Female : Karattu kallu paadhaiyirukku
Cement road pottanga
Kaalaala nadanthavangala
Caaril yera senjaanga

Female : Varapoga elllarukkum
Vasathiyaakki vechaanga
Vaangi thinnum pichaikkaran
Vavuthil mannai pottanga
Thirupathi venkatesane unna nambi
Irukkira indha dasanae

Female : Pongal puliyotharai vadai laddu
Seedai boondhi dosai adhirasamum pattu
Pongal puliyotharai vadai laddu
Thingaatha un peralae senju padaichu puttu
Dhinamum evan evano yeppam pottaan thinnu puttu
Unakkum illa enakkum illaiyae
Ketpadharkku oorukullae yaarum illaiyae

Male : Govindha govindha govindha

Female : Ulladhu podhadhunnu
Undiyalil panatha pottu
Osandha panam vendi
Varatha ketkkala naanga
Oru jaanu vayithukkaan unava thavira vera
Onnumae adhigamaaga ninaikkalae
Porulai kettaaal adikka vaaranga
Pichaiyeduthaa police vanil pudikka vaaranga
Thirupathi venkatesane unna nambi
Irukkira indha dasanae

Female : Thiruttu poruttu kuruttum seidhu
Thirupanigal nadathi veithu
Seeman endrae kaatikiravan osandhuttaan
Thillum mullum seiyaamalum
Thirunaamam solli solli
Jeevanam pannugiravan asanthuttaan

Female : Selvan ezhai ilamale seidhidu
Manasu sirusu perusu paagupattai kuraithidu
Tharisanam ellarukkum sarisamamaai koduthidu
Deivam nee endra peyarai desathil nilai naattidu
Sitham vayitha pattini podathae
Pasiyaadha vayaiythil paalum sotha adaithu vidathae
Thirupathi venkatesane unna nambi
Irukkira indha dasanae

பாடகி : ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

பெண் : திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி
இருக்கிறா இந்த தாசனே
திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி
இருக்கிறா இந்த தாசனே
பொறுப்பான ஜனங்கள் இங்கே
புண்ணியம் தேட வாராங்க
பொறுப்பான ஜனங்கள் இங்கே
புண்ணியம் தேட வாராங்க
புசிக்கவும் நாங்க கேட்டா
போடான்னுட்டு போறாங்க..
திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி
இருக்கிறா இந்த தாசனே

பெண் : கரட்டு கல்லு பாதையிருக்க
சிமெண்ட்டு ரோடு போட்டாங்க
காலால நடந்தவங்கள
காரில் ஏற செஞ்சாங்க

பெண் : வரப்போக எல்லாருக்கும்
வசதியாக்கி வச்சாங்க
வாங்கி தின்னும் பிச்சைக்காரன்
வவுத்தில் மண்ணை போட்டாங்க…
திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி
இருக்கிறா இந்த தாசனே

பெண் : பொங்கல் புளியோதரை வடை லட்டு
சீடை பூந்தி தோசை அதிரசமும் பட்டு
பொங்கல் புளியோதரை வடை லட்டு
திங்காத உன் பேராலே செஞ்சு படைச்சு புட்டு
தினமும் எவனெவனோ ஏப்பம் போட்டான் தின்னுப்புட்டு
உனக்குமில்ல எனக்குமில்லையே
கேட்பதற்கு ஊருக்குள்ளே யாருமில்லையே

ஆண் : கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

பெண் : உள்ளது போதாதுன்னு
உண்டியலில் பணத்த போட்டு
ஒசந்த பணம் வேண்டி
வரத்த கேட்கலே நாங்க
ஒரு ஜானு வயிதுக்கான உணவ தவிர வேற
ஒண்ணுமே அதிகமாக நினைக்கலே
பொருளை கேட்டால் அடிக்க வாராங்க
பிச்சையெடுத்தா போலீஸ்
வேனில் புடிக்க வாராங்க…….
திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி
இருக்கிறா இந்த தாசனே

பெண் : திருட்டு பொரட்டு குருட்டும் செய்து
திருப்பணிகள் நடத்தி வைத்து
சீமான் என்றே காட்டிகிறவன் ஒசந்துட்டான்
தில்லுமுல்லும் செய்யாமலும்
திருநாமம் சொல்லி சொல்லி
ஜீவனம் பண்ணுகிறவன் அசந்துட்டான்

பெண் : செல்வன் ஏழை இல்லாமலே செய்திடு
மனசு சிறுசு பெருசு பாகுபாட்ட குறைத்திடு
தரிசனம் எல்லாருக்கும் சரிசமமாய் கொடுத்திடு
தெய்வம் நீயென்ற பெயரை தேசத்தில் நிலை நாட்டிடு
சித்தன் வயித்த பட்டினி போடாதே
பசியாத வயித்தில் பாலும்
சோத்த அடைத்து விடாதே
திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி
இருக்கிறா இந்த தாசனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here