Singers : P. Susheela and Soolamangalam Rajalakshmi

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Haa.aaa..aaa..aaa….haaa..aa…aa..

Both Female : Thaam thith thaam thai thith thai
Thaam thith thaam thai thith thai
Thaam thith thaam thai thith thai
Thaam thith thaam thai thith thai

Both Female : Thiruthani muruga thennavar thalaiva
Sevalum mayilum kaavalil varuma
Thiruthani muruga thennavar thalaiva
Sevalum mayilum kaavalil varuma
Thiruthani muruga…….aa..aa…aa…

Female : Thenparangundram sendhur mandram
Thenparangundram sendhur mandram
Sendhamil sangam thirunaal engum
Sendhamil sangam thirunaal engum

Female : Vadivel sevai ninaindhaal paavai..ee
Haaa aa aa aa aa aa aa …
Both : Haaa aa aa aa aa aa aa …
Female : Vadivel sevai ninaindhaal paavai
Kaanum kannil engum
Kandal undhan therai
Both Female : Kaanum kannil engum
Kandal undhan therai

Both Female : Thiruthani muruga thennavar thalaiva
Sevalum mayilum kaavalil varuma
Thiruthani muruga ..aa..aa…aa…

Female : Kandha velai endha velum velluvadhillai

Female : Undhan perai andri veru solluvadhillai

Female : Unnai ennum ullam yedhum kolluvadhillai

Female : Indru naalai endrum thunbam anduvadhillai

Female : Malaiyum neeyae
Female : Kadalum neeyae
Female : Vaanum neeyae
Female : Nilamum neeyae
Female : Panja boodham ondru koodum mandram
Female : Vandha perkku vaazhvu nalgum kundram

Female : Panja boodham ondru koodum mandram
Female : Vandha perkku vaazhvu nalgum kundram
Female : Sandhanam kungumam kinkini mangalam
Female : Om enum mandhiram yaavaiyum sangamam
Female : Aathiyaagi andhamaagi needhiyaagi nenjamaagi

Both Female : Alaigal kalakalaena ilaigal salasalaena
Malaigal madamadaena ulagam isai pozhiya
Varu muruga oru muruga thiru muruga
Haa..aaa..aaa..aa..haa..aa..aa..aa..aa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : ஹா ..ஆஅ…ஆஆ..ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ

இருவர் : தாம் தித் தாம் தை தித் தை
தாம் தித் தாம் தை தித் தை
தாம் தித் தாம் தை தித் தை
தாம் தித் தாம் தை தித் தை

இருவர் : திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
திருத்தணி முருகா …ஆஅ…ஆஅ..

பெண் : தென்பரங்குன்றம் செந்தூர் மன்றம்
தென்பரங்குன்றம் செந்தூர் மன்றம்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்

பெண் : வடிவேல் சேவை நினைந்தாள் பாவை…
ஹா …ஆஅ..ஆஅ..ஆஅ..

இருவர் : ஹா …ஆஅ..ஆஅ..ஆஅ..
பெண் : வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
காணும் கண்ணில் எங்கும்
கண்டாள் உந்தன் தேரை
இருவர் : காணும் கண்ணில் எங்கும்
கண்டாள் உந்தன் தேரை

இருவர் : திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
திருத்தணி முருகா…ஆஆஆஆ……

பெண் : கந்த வேலை எந்த வேலும் வெல்லுவதில்லை!
உந்தன் பேரை அன்றி வேறு சொல்லுவதில்லை!
உன்னை எண்ணும் உள்ளம் ஏதும் கொள்ளுவதில்லை!
இன்று நாளை என்றும் துன்பம் அண்டுவதில்லை!

பெண் : மலையும் நீயே
பெண் : கடலும் நீயே
பெண் : வானும் நீயே
பெண் : நிலமும் நீயே
பெண் : பஞ்ச பூதம் ஒன்று கூடும் மன்றம்
பெண் : வந்த பேர்க்கு வாழ்வு நல்கும் குன்றம்
பெண் : சந்தனம் குங்குமம் கிண்கிணி மங்கலம்
பெண் : ஓம் எனும் மந்திரம் யாவையும் சங்கமம்

பெண் : சந்தனம் குங்குமம் கிண்கிணி மங்கலம்
பெண் : ஓம் எனும் மந்திரம் யாவையும் சங்கமம்
பெண் : ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
இருவர் : அலைகள் கலகலென இலைகள் சலசலென
மலைகள் மடமடென உலகம் இசை பொழிய
வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா!
ஹா…ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here